அதிஷ்டத்தை அள்ளித்தரும் ராம நவமி: உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
இன்று ஏப்ரல் 17ஆம் திகதி ராம நவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பகவான் ஸ்ரீ ராமரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நவமி திதியில் ஸ்ரீ ராமரை வழிபடுவதன் மூலம், சிற்பான பலன்களை பெறலாம். ராம நவமி நாளில் ஸ்ரீராமரை வழிபட வேண்டும் என்றால், அதை எந்த முறையில் செய்ய வேண்டும், பூஜை பொருட்கள் என்னென்ன தேவை என்பது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
பூஜை பொருட்கள்
- ராமர் படம்
- சந்தனம்
- பித்தளை அல்லது வெள்ளி ஸ்ரீ ராமர் சிலை
- பால்
- தயிர்
- தேன்
- சர்க்கரை
- நீர்
- கற்பூரம்
- பூக்கள்
- பழங்கள்
- இராமாயண சுந்தர காண்டம் புத்தகம்
- வெற்றிலை
- கிராம்பு
- ஏலக்காய்
- குங்குமம்
- மஞ்சள்
- வாசனை திரவியம்
- மாலை
- மஞ்சள் துணி
- விளக்கு
- துளசி
வழிபடும் முறை
ராம நவமி நாளில், பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்தருளி, குளித்த பிறகு, செம்புப் பாத்திரத்தில் இருந்து சூரியபகவானுக்கு அர்க்கியம் செய்யவும்.
ராமர் சிலை வைத்து அதனுடன் பிள்ளையார் சிலையும் வைத்து ராமர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தயிர் மற்றும் பால் கலந்து அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேகம் செய்த பிறகு பூக்கள் வைத்து அர்ச்சனை செய்யவும்.
பகவான் ராம்லாலாவுக்கு திலகம் பூசிவிட்டு, 108 ராம்-ராம் ஜெபமாலை ஜெபிக்கவும்.
பின்னர் ஆர்த்தி எடுத்து முறையான சடங்குகளுடன் பூஜையை முடிக்கவும்.
ராம நவமி மந்திரம்
ஓம் பரமாத்மநே நம
ஓம் பரஸ்மை ப்ராஹ்மணே நம
ஓம் யஜ்வனே நம
ஓம் பிதாவாஸஸே நம
ஓம் ஹரியே நம
ஓம் ராம சேதுக்ருதே நம
ஓம் ராகவாய நம
ஓம் ஆதிபுருஷாய நம
ஓம் பரகாய நம
ஓம் மஹோதராய நம
ஓம் ப்ரஹ்மண்யாய நம
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |