ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா

By Yashini Jun 07, 2024 11:30 PM GMT
Report

ராமேஸ்வரத்தில் ராமர்- சீதாதேவியால் உருவாக்கப்பட்ட புண்ணிய ஸ்தலமாக ராமநாதசுவாமி கோவில் இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்கிவருவதால் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வந்து ராமநாதசுவாமி - பர்வதத்தினி அம்பாள் வழிபட்டு செல்கின்றனர்.

இங்கு ஆடித்திருவிழா, மாசி திருவிழா, ராமலிங்க பிரதிஷ்டை ஆகியவை முக்கிய திருவிழாக்களாக நடைபெறும். 

ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா | Ramalinga Consecration Festival At Rameswaram

வரக்கூடிய ஜீன்14 ஆம் திகதி தொடங்கி ஜூன் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

  1. ஜூன்14 (வெள்ளி)- மாலை 5 மணிக்கு மேல் ராவணசம்ஹாரம்.
  2. ஜூன் 15 (சனி)- 12 மணிக்கு மேல் விபீஷணர் பட்டாபிஷேகம்.
  3. ஜூன் 16(ஞாயிறு)- காலை 8 மணிக்கு ராமர் புறப்பாடாகி நண்பகல் 11:50 மணிக்கு ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஜீன் 15 ஆம் திகதி நடைபெறும் விபீஷணர் பட்டாபிஷேகத்திற்கு ராமர் புறப்பாடாகி கோதண்டராமர் கோவில் செல்வதால் அதிகாலை 2:30 மணிக்கு கோவில் நடை திறந்து, 3:00 மணிமுதல் 3:30 மணிவரை ஸ்படிக லிங்கம் பூஜை நடைபெறும்.

ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா | Ramalinga Consecration Festival At Rameswaram 

பின்பு கால பூஜைகள் நடைபெற்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை கோவில் நடைசாத்தப்படும்.

இதன் பின்பு கோவில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.       

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US