உங்கள் கனவில் கர்ப்பிணி பெண் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

By Sakthi Raj May 16, 2026 09:04 AM GMT
Report

கனவு என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தொடர்புடையதாக இருக்கிறது. பொதுவாக கனவு என்பது நாம் அன்றைய நாள் நண்பர்களுடன் பேசியது அல்லது பெற்றோர்களுடன் ஆலோசனை செய்தது, பார்த்த விஷயங்கள் மற்றும் கேட்ட விஷயங்கள் போன்றவை நம் கனவில் வருவதை பார்க்க முடிகிறது.

சில சமயங்களில் இது எல்லாம் கடந்து எதிர்பாராத கனவுகளையும் நாம் சந்தித்து இருப்போம். அவை நம் ஆழ்மனதின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. என்னதான் கனவுகள் ஆழ்மனதின் வெளிப்பாடாக இருந்தாலும் அவை சில சமயங்களில் நமக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதின் ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

அப்படியாக, உங்களுடைய கனவுகளில் நீங்கள் கர்ப்பிணி பெண்ணை பார்க்கிறீர்கள் என்றால் அந்த கனவின் அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். ஒருவருடைய கனவில் கர்ப்பிணிப் பெண் வருகிறார்கள் என்றால் அது அந்த நபரின் வாழ்க்கையில் நடக்க இருக்க கூடிய புதிய தொடக்கத்தை குறிக்கும்.

உங்கள் கனவில் கர்ப்பிணி பெண் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? | Reason Behind Seeing Pregnant Women In Dream

2026 வைகாசி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? யார் கவனமாக இருக்க வேண்டும்

2026 வைகாசி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? யார் கவனமாக இருக்க வேண்டும்

அதாவது அவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லக்கூடிய புதிய விஷயங்கள் நடைபெறும். அவை திருமணமாக இருக்கலாம், உயர் கல்வி வாய்ப்பு, வேலை மாற்றம், வீடுகளில் செல்வ வளம் பெறுக கூடியதாக இருக்கலாம்.

அதுவே நீங்கள் கர்ப்பிணி பெண்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு வாழ்க்கையில் தடைப்பட்ட காரியங்களில் இருந்து விடுபட போகிறீர்கள் என்பதின் அர்த்தம். அதோடு, நீங்கள் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரப்போவதின் அறிகுறியாகும்.

இவ்வாறு கனவு வந்தால் நீங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த காரியங்கள் தடையின்றி நடைபெறும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US