வீடுகளில் முக்கியமான நாட்களில் இந்த பொருட்கள் உடைகிறதா? கவனிக்கத் தவறாதீர்கள்?
ஒரு சில நேரங்களில் நாம் ஒரு முக்கியமான நாளில் ஏதேனும் முக்கியமான பொருள் கீழே உடைந்து விடுவதை நாம் பார்க்க முடியும்.
இதற்கு காரணம் அந்த நேரங்களில் நாம் இருக்கக்கூடிய மனப்பதட்டம் என்பதை தாண்டிலும் நம்மை சுற்றி இருக்கக்கூடிய கண் திருஷ்டி, நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலின் விளைவுகளே காரணமாக இருக்கிறது.
இப்பொழுது கீழே விழுந்து உடைகின்ற பொருளின் காரணமாக நாம் அந்த இடத்தில் சற்று தெளிவு பெறுகின்றோம். எதிர்மறை ஆற்றல் நம்மை சூழ்கின்ற பொழுது நம்முடைய கண்களை மூடி மறைப்பது போல் இருக்கும்.
அவ்வாறான நேரங்களில் ஒரு பொருள் கீழே விழுகிறது என்றால் கட்டாயம் நம்முடைய மனமானது சற்று விழித்துக் கொள்ளும். ஆக, அந்த பொருள் உடைக்கின்ற நேரத்தில் சற்று விழிப்புணர்வு பெற்று நாம் சரியாக இயங்குவதற்கு துவங்குவோம்.
ஆக, வீடுகளில் முக்கியமான நாட்களில் பொருட்கள் கீழே விழுந்து உடைகிறது என்றால் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் செய்த புண்ணியம் பொருட்கள் கீழே விழுந்து உடைவதோடு போகிறது என்று இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |