சரஸ்வதி பூஜை அன்று வீடுகளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் படிப்பு என்பது முக்கியமானதாக இருக்கிறது. அந்த படிப்பை நமக்கு அருளக்கூடியதெய்வமாக சரஸ்வதி தேவி இருக்கிறார்.
அந்த வகையில், சரஸ்வதியை போற்றும் வகையில் நாம் சரஸ்வதி பூஜையை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றோம். இந்த 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வருகிறது.
அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமி நடக்கிறது. இந்த நாளில் நாம் வீடுகளில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

செய்யவேண்டியவை:
பொதுவாக, சரஸ்வதி பூஜை அன்று நாம் வீடுகளில் புத்தகங்களை வைத்து படைத்து வழிபாடு செய்வது உண்டு. அதனால், பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து, சரஸ்வதி படத்திற்கு முதலில் சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு விநாயகரை வழிபாடு செய்து புத்தகங்கள், கருவிகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு பொரி, அவல் பழங்கள் சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைக்கலாம்.

அந்த நாளில் குடும்பத்துடன் சகலகலாவல்லி மாலை ஸ்லோகங்களை பாராயணம் செய்வது மிக மிக அவசியம். இந்த நாட்களில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது என்பது மிகவும் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேபோல், புதிய கலைகளை கற்று தெரிந்து கொள்ளவும் இந்த நாள் புதிய தொடக்கமாக இருக்கிறது.
செய்யக்கூடாதவை:
சரஸ்வதி பூஜை அன்று நம் வீடுகளில் வைத்திருக்கக்கூடிய புத்தகங்களை அன்றைய தினமே பூஜை முடித்து எடுக்கக் கூடாது.
அதேசமயம், அன்றைய நாள் அசைவ உணவு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கோபத்தை விடுவிக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |