கடக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் வாழ்க்கையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறதாம்

By Sakthi Raj Oct 18, 2026 04:47 AM GMT
Report

ஜோதிட ரீதியாக சந்திர பகவானுடைய ஆதிக்கத்தை கண்ட கொண்ட கடக ராசியினர் எப்பொழுதும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அன்பும் பாசமும் ஒருவரிடத்தில் அதிகம் வைக்கக் கூடியவர்கள்.

அந்த வகையில், இவர்களுக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். நவம்பர் மாதம் இவர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக செவ்வாய் பகவான் 17ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்வதால் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பண வரவை கொடுக்க போகிறது.

ஜாதகத்தில் கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தால் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?

ஜாதகத்தில் கேது பகவான் மூன்றாம் இடத்தில் இருந்தால் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா?

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் கட்டாயமாக நினைத்த வெற்றி கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செயல் படுத்துவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதால் மிகப் பெரிய அளவில் மாற்றத்தை சந்திப்பீர்கள். இந்த காலகட்டங்களில் நீங்கள் திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது மிக சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இருப்பினும் இவர்கள் நவம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக அவசியம். இவர்களுக்கு 12 ல் சுக்கிரனின் சஞ்சாரத்தால் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆகையால், இவர்கள் தியானம் செய்வதின் வழியாக மகிழ்ச்சியை அடையலாம். இவர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஹோமம் செய்வது மிகச்சிறந்த நன்மையை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், கடக ராசியினருக்கு இந்த நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US