ஒரு சிரிப்பால் உருவான பாரத போர்
நம் வாழ்க்கையில் எதையும் சாதாரணமாக மதித்து விடக்கூடாது.காரணம் ஒரு சிறிய விஷயம் கூட ஒரு பெரிய தாக்கத்தையும்,எதிர்பாராத விபரீதத்தையும் உண்டாக்கக்கூடும்.அவ்வாறாக பாரதமே போற்றும் மஹாபாரதம் தொடங்க ஒரு சிறிய விஷயம் காரணமாக அமைந்திருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
ஒருமுறை பாண்டவர் கட்டிய அதிசிய மாளிகையைக் காண துரியோதனன் வந்தான்.அதாவது பாண்டவர்கள் அவர்களின் மாளிகையை வித்யாசமாக கட்டி இருந்தனர்.பல இடங்களில் கண்ணாடியை உபயோகித்து கட்டியிருந்தார்கள்.
அதை கவனிக்காமல் துரியோதன் பாதை என்று நுழைந்து கண்ணாடி சுவற்றில் முட்டிக் கொண்டான்.அதேபோல் சுற்றி பார்த்துக்கொண்டு இருக்க,தண்ணீர் என்று ஒரு இடத்தில் மெதுவாக கால் வைக்க அந்த இடத்தில் பளிங்குக்கல் பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஏமாற்றம் அடைந்தான்.
அதே நம்பிக்கையில்,தரையென்று நினைத்து அழுத்தமாக கால் வைக்க தண்ணீரில் விழுந்துவிட்டான். இந்த விஷயங்களை கவனித்து கொண்டு இருந்த பாஞ்சாலி அவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்துவிட்டாள்.அதோடு மட்டும் அல்லாமல் "குருட்டுத் தந்தையின் புத்திரர்களும் குருடர்களாகவே இருக்கிறார்களே" என கேலி செய்துவிட்டாள்.
அந்த நக்கல் சிரிப்பு தான் ஒரு மிக பெரிய போருக்கு விதையாகவும் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.அதோடு ஒரே வீட்டில் வாழ்ந்த ஒன்றுவிட்ட சகோதரர்களின் கேலி விளையாட்டு மிக பெரிய யுத்த களத்தில் நிறுத்தும் என்று யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
பாண்டவர்கள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்த துரியோதனன் தனக்கு மிகுந்த மரியாதையும் அன்பு நிறைந்த பரிசுகளும் எதிர்பார்த்தான்.ஆனால் அவனுக்கோ நேர் எதிராக கேலி சிரிப்பும் கிண்டலும் பரிசாக கிடைத்தது. அங்கே தான் துன்பம் வழிப்பாதையாகிறது.
அந்த பாதையில் சமயம் பார்த்து திரௌபதி துகிலுறியப்பட்டாள்.எதையும் பற்றி சிந்திக்காமல் துரியோதனனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தவளுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அந்த நிகழ்வு அமைந்து விட்டது.ஆனால் அது அவளின் தீர்க்க முடியாத துக்கம் ஆகிப்போனது.
அவளின் சிரிப்பு நாடுமுழுவதும் காட்டு தீயாக கொழுந்து விட்டு எரிந்ததது.பாரதமே போர் பூமி ஆனது. ஆக காலம் சூழ்நிலை அறிந்து நாம் செயல்படவில்லை என்றால் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.நாமும் வாழ்க்கையில் மிக பெரிய யுத்தத்தை சந்திக்கக்கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |