சிவபெருமான் உங்கள் கனவில் வருகிறாரா? அதன் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
கனவு வருவதை எந்த மனிதனும் தடுக்கமுடியாத ஒன்றாகும். மேலும், அந்த கனவானது நம் ஆழ்மனதின் வெளிப்பாடு என்று சொன்னாலும், அவை சமயங்களில் நம்முடைய எதிர்காலம் பற்றிய தகவல்களை எச்சரிக்கைகளை நமக்கு கொடுக்கிறது.
அந்த வகையில் ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அப்படியாக, ஒருவர் கனவில் சிவபெருமான் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். பொதுவாகவே, கனவுகளில் கோயில், மற்றும் ஆன்மீக தொடர்பான விஷயங்களை பார்ப்பது என்பது மிகவும் நல்ல அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
அதிலும், இறைவனை நம் கனவில் காணும் பொழுது அவை பெரும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. அதிலும் சிவபெருமான் நம் கனவில் தோன்றினால் சிவனின் முழு ஆசீர்வாதம் நமக்கு இருப்பதை உணர்த்துகிறது.
மேலும், கனவில் சிவபெருமானும் பார்வதி இருவரும் ஒரு சேர கண்டால் அவை வாழ்க்கையில் சமநிலை, ஒற்றுமை, மகிழ்ச்சி இவை அனைத்தையும் குறிக்கிறது.
அதேப்போல், சிவலிங்கத்தை கனவில் கண்டால் அவை நமக்கான துன்பம், கஷ்டம் இவற்றில் இருந்து விடுபட்டு நல்வழி பிறக்கப்போகிறது என்று அர்த்தம்.
ஆக, இவ்வாறான கனவுகள் வந்தால் சிவன் ஆலயம் சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வரலாம், முடிந்தவர்கள் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து வரலாம். அவை நல்ல மாற்றத்தை வழங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |