12 ராசிகளும் ஆடிப் பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரம்
ஜோதிடத்தில் குரு பகவான் ஒருவருக்கு ஞானம், கல்வி, செல்வம், திருமனையோகம் ஆகியவற்றை வழங்க கூடியவராக இருக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலமாக இருந்து விட்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். எந்த தடைகளும் இல்லாமல் அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கான அருளை பெறுவார்கள்.
அதனால்தான் ஒவ்வொரு வருடமும் குரு பூர்ணிமா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி பௌர்ணமியை தான் நம் குரு பூர்ணிமா என்று சொல்கிறோம். இந்த நாளில் குரு பகவானை மனதார வழிபாடு செய்தால் நமக்கு குருவினுடைய அருளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மேலும், இன்றைய நாள் குரு பகவானை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான ஒரு நல்ல குருமார்களில் அருள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குரு பூர்ணிமா நாளில் மகரிஷி வியாசரை நினைவுகூர்ந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த நாளில் செய்யப்படும் நல்ல செயல்கள் மற்றும் நேர்மறையான மாற்றங்கள் நமக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு திருமண தாமதம், கல்வியில் தொடர்ந்து தடைகள் நல்ல வேலை கிடைப்பதில் தாமதம், பணம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலைமை குழந்தைகள் விஷயங்களில் கவலை பெரியவர்களின் ஆதரவு கிடைக்காமல் இருப்பது போன்ற நிலையில் உருவாக்கும்.
குரு பூர்ணிமா நாளில் என்ன செய்யலாம்?
ஒருவர் ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இந்த ஆடி பௌர்ணமி என்கின்ற குரு பூர்ணிமா நாளில் குரு பகவானுக்குரிய மஞ்சள் நிறம் வஸ்திரம், மஞ்சள் பூ, சந்தனம், கடலைப்பருப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு செய்யலாம்.

மேலும், சிவபெருமான ஆலயங்களில் இருக்கக்கூடிய தக்ஷிணாமூர்த்தியை இந்த நாளில் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும். அதோடு குரு பகவானுடைய மந்திரங்களை பாராயணம் செய்வது சிறந்தது.
இந்த நாளில் நமக்கு குருவாக ஆசிரியராக இருந்தவர்களை நேரில் சென்று அவர்களை வணங்கி தொழுவது நமக்கு எல்லா பிறவிகளிலும் குரு பகவானின் முழு அருளை பெற்றுக் கொடுக்கும். இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது எண்ணற்ற பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |