திருமணத்தில் தடையா? இந்த பரிகாரங்கள் செய்தால் விரைவில் திருமணம் நடக்குமாம்

By Sakthi Raj Apr 30, 2026 04:19 AM GMT
Report

ஒரு மனிதனுக்கு திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் படித்து முடித்து கை நிறைய வேலை பார்க்கக்கூடிய ஆண் பெண் இருவருக்குமே சமயங்களில் திருமணம் தாமதம் ஆகுவதை பார்க்க முடிகிறது.

இதனை ஜோதிட ரீதியாக எடுத்து பார்க்கும் பொழுது அவர்களுடைய ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்து இருக்கக்கூடிய இடம் பாதிக்கப்பட்டிருக்கும்.

அதாவது லக்னத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு திருமணத்தில் தடை தாமதம் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் சனி செவ்வாயை ஏழாம் பார்வையாக பார்த்தாலும் அவர்களுக்கு திருமணத்தில் கடுமையான தடைகள் வருவதை நாம் பார்க்க முடிகிறது.

இதற்கெல்லாம் நாம் எளிய பரிகாரமாக தொடர்ந்து ஒரு விஷயங்களை செய்து வரும் பொழுது நிச்சயம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்லவரன் அமைய கூடிய யோகத்தை பெறலாம்.

இந்த உலகத்தில் மரண தண்டனை விடவும் மோசமான தண்டனை எது தெரியுமா?

இந்த உலகத்தில் மரண தண்டனை விடவும் மோசமான தண்டனை எது தெரியுமா?

இதற்கு ஒரு முக்கியமான பரிகாரமாக திண்டுக்கல்லில் அமைந்து இருக்கக்கூடிய வரதராஜ பெருமாள் கோவிலில் அங்கு மன்மதன் ரதியை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு உரிய தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும்.

முக்கியமாக அங்கு கோவிலில் செய்யவேண்டிய பரிகாரம் ஆண்களாக இருந்தால் ரதிக்கு மாலையிட்டு வழிபாடு செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் மன்மதனுக்கு தங்கள் கைகளால் மாலையிட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

ஆனால் இந்த வழிபாட்டு முறையை பங்குனி மாதத்தில் மட்டும் நாம் செய்வதை தவிர்த்து விட வேண்டும். திண்டுக்கல் செல்ல முடியாதவர்கள் வேறு எந்த கோவில்களிலும் மன்மதன் ரதி இருக்கக்கூடிய ஆலயமாக இருந்தால் அங்கு சென்று வழிபாடை செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலனை பெறலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US