சனி தோஷத்தால் கஷ்டப்படுபவர்களா? உடனடியாக இந்த பரிகாரம் செய்து பாருங்கள்.

By Sakthi Raj Jun 26, 2026 04:11 AM GMT
Report

ஒரு மனிதனை இன்னும் ஒரு சிறப்பான மனிதனாக மாற்றுவது சனி பகவான் தான். அதாவது ஒருவர் செய்கின்ற நன்மை தீமைக்கு ஏற்ப அந்த நபருக்கு அவர் அருள் வழங்குகிறார். பெரும்பாலும் சனி திசை ஏழரை சனி, அஷ்டமத்து சனி இவ்வாறான காலகட்டங்களில் இந்த நபர்கள் கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை கடந்து அவர்கள் ஒரு உண்மை நிலையை உணர்கிறார்கள் என்றே நாம் சொல்லலாம்.

இருப்பினும் அந்த கஷ்டங்கள் நமக்கு கடினமாக தான் இருக்கும். அவ்வாறு சளிதோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழ்காணும் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல பலன்களை பெறலாம். சனி தோஷத்தால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை அன்று நவகிரக சந்ததிக்கு சென்ற எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது ஒரு சிறந்த பலன் பெற்றுக் கொடுக்கும்.

சனி தோஷத்தால் கஷ்டப்படுபவர்களா? உடனடியாக இந்த பரிகாரம் செய்து பாருங்கள். | Remedies For Person Who Suffering From Sani Dosham

மகர ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. ஜூலை மாதம் கட்டாயம் இது நடக்குமாம்

மகர ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. ஜூலை மாதம் கட்டாயம் இது நடக்குமாம்

அதே போல் உடல் ஆரோக்கியம் உடல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது விதவை பெண்களுக்கு மனதார உதவி செய்வதும் கஷ்டங்களிலிருந்து விடுதலை கொடுக்கும். காகத்திற்கு எள் கலந்த சாதத்தை நாம் படைக்கும் பொழுது முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

இரும்பு அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி கருங்குவளை மலரால் சனீஸ்வரரை அர்ச்சனை செய்வதும் எல்லா தோஷத்திலிருந்து விடுதலை கொடுக்கும். இதை விட முக்கியமாக சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்து நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது நல்ல கஷ்டங்களில் இருந்து விடுதலை பெற்றுக்கொடுக்கும்.

சனி தோஷத்தால் கஷ்டப்படுபவர்களா? உடனடியாக இந்த பரிகாரம் செய்து பாருங்கள். | Remedies For Person Who Suffering From Sani Dosham

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இருக்குமாம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இருக்குமாம்

சனிக்கிழமை அன்று தவறாமல் விநாயகரை அனுமானை வழிபாடு செய்வதாலும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். அதோடு ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலமான மாலை 4:30 முதல் 6 மணிக்குள் காலபைரவரை வழிபாடு செய்வது எப்பேர்ப்பட்ட சனி தோஷத்திலிருந்து விடுதலை கொடுக்கும்.

ஸ்ரீ ராம நாமம் ஜெபிப்பது அல்லது ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 108 முறை எழுதுவது தடைகளை அகற்றி வெற்றிகளை கொடுக்கும். இந்த காலகட்டங்களில் சித்தர்களுடைய சமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

ஜீவ சமாதிகளை பௌர்ணமி தினத்தன்று தரிசிப்பது முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களில் நடக்கும் அன்னதானத்திற்கு பொருள் உதவி செய்வது இவை எல்லாம் நமக்கு ஏற்படுகின்ற பல கஷ்டங்களில் இருந்து விடுதலை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US