ஜாதகத்தில் இந்த கிரகங்கள் பலம் இழந்துள்ளதா? எளிய பரிகாரங்கள் இதோ

By Sakthi Raj Jul 27, 2026 03:00 PM GMT
Report

நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் அமர்ந்திருக்கக்கூடிய வீடு தான் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களை கொடுக்கிறது.

அப்படியாக, ஒரு சில கிரகங்கள் பலவீனமாகவும் நீசம் பெற்றும் அமர்ந்திருக்கும் பொழுது நமக்கு வாழ்க்கையில் சில கஷ்டங்களை கொடுக்கலாம்.

இந்த 4 ராசிகளுக்கு தான் கண் திருஷ்டி அதிக அளவில் பாதிப்பை கொடுக்குமாம்

இந்த 4 ராசிகளுக்கு தான் கண் திருஷ்டி அதிக அளவில் பாதிப்பை கொடுக்குமாம்

அந்த வகையில் ஜாதகத்தில் நம்முடைய ஜாதகத்தில் எந்த கிரகம் பலவீனமாக இருக்கிறதோ அதை பலப்படுத்த நாம் ஒரு சில முக்கியமான விஷயங்களை பின்பற்றலாம். அதை பற்றி பார்ப்போம்.

1. ஒருவருக்கு சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அவர்கள் தினமும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடை அணிந்து செல்வது அவசியம்.

2. அதேபோல், சூரியன் பலவீனமாக இருந்தால் அவர்கள் அதிகாலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்வது அவசியம்.

ஜாதகத்தில் இந்த கிரகங்கள் பலம் இழந்துள்ளதா? எளிய பரிகாரங்கள் இதோ | Remedies For Weak Planets In Horoscope

3. சனிபகவான் பலவீனமாக இருந்தால் அவர்கள் ஒழுக்கமான வாழ்க்கையும் தினசரியான வாழ்க்கையில் சுறுசுறுப்பாக வேலை செய்வதும் அவசியம்.

4. ராகு பகவான் பலவீனமாக இருந்தால் அவர்கள் மொபைல் மற்றும் சமூக வலைத்தளம் போன்றவற்றிலிருந்து சற்று விலகி இருப்பது அவசியம்.

5. சந்திர பகவான் பலவீனமாக இருந்தால் அவர்கள் வெள்ளி டம்ளர் அல்லது வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

60 ஆண்டு கால கணிப்புகளை விட்டு சென்ற இடைக்காடர் சித்தர்.. நடந்து என்ன

60 ஆண்டு கால கணிப்புகளை விட்டு சென்ற இடைக்காடர் சித்தர்.. நடந்து என்ன

6. புதன் பகவான் பலவீனமாக இருந்தால் இவர்கள் தினமும் உரக்க படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது அவசியம்.

7. கேது பகவான் பலவீனமாக இருந்தால் இவர்கள் தினமும் தியானம் செய்து பழகுவது அவசியம். இவ்வாறு செய்து வரும் பொழுது கிரகங்கள் பலம் பெறுவதோடு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் நமக்கு குறைகிறது 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US