ஏழரை சனியால் பயமா? இந்த 3 பரிகாரங்கள் மட்டும் செய்து பாருங்கள்..
சனிபகவான் என்றாலே எல்லோருக்கும் நிச்சியம் ஒரு பயம் வந்துவிடும். என்னதான் நாம் இந்த பிறவியில் நன்மைகள் செய்திருந்தாலும் முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்கு உரிய தண்டனைகள் அனுபவிக்காத நிலையில் அந்த பாவம் நம்மை இந்த வருடத்தில் தொடர்ந்து விடும்.
அதற்கான பாடத்தை சனி பகவான் கட்டாயம் சரியான காலகட்டங்களில் நமக்கு கொடுத்து விடுவார் அதனால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும். பதட்டத்துடனே இருப்பார்கள்.
அவ்வாறு இனிமேல் ஏழரை சனி என்கின்ற பயம் இல்லாமல் குறிப்பிட்ட சில பரிகாரங்கள் செய்தால் நிச்சயம் சனி பகவானுடைய மனம் தொடர்ந்து அவர் நமக்கு ஆசீர்வாதத்தை வழங்குவார் அதைப்பற்றி பார்ப்போம்.

பரிகாரங்கள்:
1. உங்களுக்கு ஏழரை சனி நடக்கிறது என்றால் மனரீதியாக நிறைய குழப்பங்கள் இருக்கும். அதனால் நீங்கள் சனிக்கிழமையில் இரவு நேரங்களில் விளக்கில் எண்ணெய் ஊற்றாமல் பருத்தித் திரியை மட்டும் போட்டு 11 நிமிடம் எரிய விட்டு அதன் அருகில் அமர்ந்து மௌனம் கொள்ளுங்கள். இதனால் நம்முடைய சோதனை காலம் முடிவுக்கு வருவதோடு மன அழுத்தம் பயம் எல்லாம் குறையும்.
2. ஏழரை சனி நடக்கும் பொழுது எறும்புகளுக்கு உணவு வையுங்கள். ஆனால் உங்கள் கைகளால் ஒருவருக்கு கொடுத்து அந்த உணவை எறும்புகளுக்கு வைக்கச் சொல்லுங்கள். இதனால் தீய கர்ம பலனானது குறையும்.
3. ஏழரை சனி காலங்களில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு சிட்டிகை கல் உப்பு எடுத்துக்கொண்டு தலைக்கு மேலே ஏழுமுறை சுற்றி ஓடும் நீரில் போட்டு விடுங்கள். இதனால் பண இழப்பு மன அழுத்தம் எல்லாம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |