கேது தசா புத்தி நடக்கிறதா? இழப்புகளை தவிர்க்க இந்த பரிகாரங்களை செய்யுங்கள்..
ஜோதிடத்தில் கேது என்பவர் நம்முடைய மனதை சுருக்கி ஆன்மீக சிந்தனையை அதிகரிக்க கூடியவர். உலகத்தின் பற்றின்மை உணர்த்தக் கூடியவர். அந்த வகையில், கேது தசாபுத்தி நடக்கின்ற பொழுது ஒவ்வொருவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை பொறுத்து அவர்களுக்கு நன்மை தீமை அமைகிறது.
அப்படியாக கேது தசாபுத்தி நடக்கிறது என்றால் அவர்கள் சில பரிகாரங்கள் செய்தால் ஆபத்தில் இருந்து விடுபடலாம். அதை பற்றி பார்ப்போம்.
கேது தசாபுத்தியில் கேது புத்தி நடக்கிறது என்றால் அவர்கள் புறாவிற்கு தானிய உணவுகளை வழங்கலாம்.

சிவபெருமானுக்கு வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி பால் பாயாசம் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்யலாம்.
கேது தசா புத்தியில் செவ்வாய் புத்தி நடக்கிறது என்றால் முருகப்பெருமானுக்கு சிவப்பு ரோஜா மாலை சாற்றி கற்கண்டு நெய்வேத்தியம் படைக்கலாம்.
கேது தசா புத்தியில் குரு புத்தி நடக்கிறது என்றால் வியாழக்கிழமை நவதானியம் அடை செய்து நெய் தீபம் ஏற்றி குருபகவானை வழிபாடு செய்வது அவசியம்.
கேது தசை சுக்ர புத்தி நடக்கிறது என்றால் விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்து பச்சரிசியில் கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யலாம்.

கேது தசா புத்தியில் சந்திர புத்தி நடக்கிறது என்றால் அம்மனுக்கு சிவப்பு புடவை சாற்றி வழிபாடு செய்யலாம்.
கேது திசையில் சனி புத்தி நடக்கிறது என்றால் ஊதா கலர் வஸ்திரம் சாற்றி மலர்மாலை அணிவித்து கருப்பு திராட்சை நெய் நெய்வேத்தியம் செய்யலாம். வசதி இருப்பவர்கள் எருமை மாடு தானம் செய்யலாம். எருமைக்கு உணவு வழங்கலாம்.
கேது திசையில் புதன் புத்தி நடக்கிறது என்றால் புதன் பகவானுக்கு கரும்புசாறு அபிஷேகம் செய்து வாசனை ஊது புத்தி ஏற்று ஏழை மாணவர்களுக்கு புத்தகம் தானம் வழங்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |