வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Jul 29, 2026 01:00 PM GMT
Report

ஒருவருக்கு கண் திருஷ்டி பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அந்த நபருக்கு கட்டாயமாக வாழ்க்கையில் நிம்மதி என்பது சுத்தமாக இருக்காது. அந்த வகையில், கண் திருஷ்டி கெட்ட சக்தி மற்றும் தீய சக்திகள் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரங்கள் நீங்கள் தொடரும் பொழுது குலதெய்வம் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். குலதெய்வம் கோயிலுக்கு சென்ற வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்து வழிபாடு செய்யலாம்.

பிறகு ஒரு சுத்தமான தட்டில் கல் உப்பை பரப்பி அதன் மேல் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் மற்றும் கெட்ட சக்திகள் விலக செய்ய வேண்டிய பரிகாரம் | Remedies To Remove Negative Energy At Home

2026: இன்று ஆடி பெளர்ணமி அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 தவறுகள்..

2026: இன்று ஆடி பெளர்ணமி அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 தவறுகள்..

கற்பூரம் எரியும் வரை அந்த ஒளியை பார்த்து வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் திருஷ்டி எல்லாம் விலகி செல்ல வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிறகு கற்பூரம் அணைந்த பிறகு தட்டில் இருக்கும் உப்பை தண்ணீர் இருக்கும் ஜக்கில் அல்லது பக்கத்தில் கொட்டி விட வேண்டும். சிறிது நேரத்தில் உப்பு கரைந்து விடும். பிறகு அந்த தண்ணீரை தொடாமல் அப்படியே வீட்டிற்கு வெளியே சென்று ஊற்றி விடுங்கள்.

இந்த பரிகாரத்தை வாரத்திற்கு ஒரு நாள் என்று மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். வீடுகளில் உள்ள பாதிப்புகள் குறைவதற்கு கல் உப்பை தவிர சிறந்த பொருள் நிச்சயம் இல்லை. அதனால் இதை மனதார நாம் செய்யும் பொழுது நம்முடைய வீடுகளில் சூழ்ந்துள்ள தீய சக்திகள் முற்றிலுமாக விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US