வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் நிறைந்திருக்க இதை செய்யுங்கள்
வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க வேண்டும், வீட்டில் எந்த கஷ்டமும் ஏற்படக் கூடாது என்ற எண்ணம், ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும்.
வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் பரவி இருக்க இந்த எளிய, மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
வீட்டில் ஒரு பாத்திரத்தில் பன்னீர் அல்லது தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கைபிடி சுவாமிக்கு அர்ச்சனை செய்த மல்லிகைப்பூ எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த பூவை எடுத்து, ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பன்னீர் அல்லது தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு விடுங்கள்.
சிறிது திருநீரை எடுத்து மனதார கடவுளை வேண்டிக் கொண்டு, அதையும் அந்த தண்ணீருக்குள் போட்டு விடுங்கள்.
அனைத்தையும் நன்றாக கலந்து, அந்த தண்ணீருக்குள் கை வைத்து, "ஓம் குபேராய நமஹ மகாலட்சுமியே நமஹ" என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
அதற்கு பிறகு ஒரு மாவிலையை எடுத்து அதில் அந்த தண்ணீரை எடுத்து, மல்லிகைப்பூவுடன் சேர்த்தே வீடு முழுவதும் தெளிவித்து விடுங்கள்.
அதற்கு பிறகு மீண்டும் பூஜை அறைக்கு சென்று பூஜை செய்து வழிபடலாம். இவற்றை செய்து முடித்த சிறிது நேரத்திலேயே வீட்டில் தெய்வீக மனம் வீசுவதை உணர முடியும்.
இந்த பரிகாரத்தை தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை வெள்ளிக்கிழமையில் செய்யலாம். மாலை 05.30 மணி முதல் 6 மணிக்கு செய்வது சிறப்பு.
இந்த பரிகாரத்தை ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம்.
வீட்டில் மட்டுமின்றி, வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் இதை செய்வது நேர்மறை ஆற்றலை உருவாகி, லாபம் பெருக காரணமாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |