வீடுகளில் வேல் பூஜை இப்படி செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்

By Sakthi Raj Feb 06, 2026 07:00 AM GMT
Report

 இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு தனித்துவமான அம்சம் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு தெய்வமும் தங்களுடைய கைகளில் ஒரு சிறப்பு ஆயுதம் ஏந்தி கொண்டு இருப்பார்கள். அப்படியாக முருகப்பெருமானை எடுத்துக் கொண்டால் அவர் சக்தியின் வடிவமாக திகழும் வேல் அவர் கைகளில் வைத்திருக்கிறார்.

முருகப்பெருமாள் கைகளில் இருக்கக்கூடிய வேல் தீய சக்திகளை அழித்து நன்மைகளை கொடுக்கக் கூடியதாக கருதப்படுகிறது. அதாவது அரக்கர்களை அழித்து உலகைக்காக்க கூடிய வேலாயுதம் பக்தர்களின் குறையை தீர்ப்பதாகவும், அவர்களை ஆபத்துகளில் இருந்து காப்பதாகவும் இருக்கிறது.

அப்படியாக முருகப்பெருமான் மீது வைத்திருக்கக்கூடிய பக்தியாலும் அன்பாலும் வீடுகளில் வேல் வாங்கி வைத்து பலர் வழிபாடு செய்வார்கள். வீடுகளில் வேல் வைத்து வழிபாடு செய்யக்கூடிய முறையான வழிமுறைகள் என்ன? எப்படி வேல் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் வேல் பூஜை இப்படி செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம் | Right Way To Do Vel Poojai At Home

வேல் வைத்து பூஜை செய்யும் முறை:

வீடுகளில் வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அறுவடை வீடுகளில் ஏதேனும் ஒரு தலத்தில் விற்கப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட சிறிய வேல் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வீட்டிற்கு அந்த வேலை கொண்டு வந்த பிறகு உடனடியாக அந்த வேலுக்கு பூஜை செய்ய வேண்டும்.

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் எது தெரியுமா? தவறவிடாதீர்கள்

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் எது தெரியுமா? தவறவிடாதீர்கள்

பூஜை அறையில் ஒரு புதிய சிவப்பு நிற துணியை விரித்து அதன் மீது ஒரு வெள்ளி கிண்ணம் அல்லது பித்தளை கிண்ணம் அல்லது செம்பு கிண்ணம் வைத்துக்கொண்டு அந்த கிண்ணத்தில் புதிய பச்சரிசி நிரப்ப வேண்டும். அதன் நடுவில் வேலாயுதத்தை நேராக நட்டு வைக்க வேண்டும். இதுவே வேல் பூஜைக்கான அடிப்படை முறையாகும்.

அபிஷேகம் செய்யும் முறை:

மேலும் வேல் பூஜையை தொடங்குவதற்கு சிறந்த நாளாக வளர்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது சுப முகூர்த்த நாள் அன்று முதல் முதலாக வேல் பூஜை தொடங்கலாம். முதலில் கங்கை நீர் கொண்டு வேலுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ச்சாத பசும்பால் கொண்ட அபிஷேகம் செய்ய வேண்டும்.

வீடுகளில் வேல் பூஜை இப்படி செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம் | Right Way To Do Vel Poojai At Home

தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள்

தந்தை உயிருடன் இருக்கும் பொழுது மறந்தும் மகன் செய்யக்கூடாத காரியங்கள்

பின்னர் சாதாரண தூய நீரால் வேலாயுதத்தை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான துணியால் மென்மையாக அந்த வேலை துடைத்து மீண்டும் புதிய பச்சரிசி நிரப்பி கிண்ணத்தில் வேலாயுதத்தை நட்டு வைக்க வேண்டும். அபிஷேகத்திற்கு பிறகு சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை வேலின் இரு பக்கங்களிலும் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

முருகப்பெருமானுக்கு பிடித்த பன்னீர் ரோஜா, செவ்வரளி பூ போன்றவை வைத்து பூஜை செய்யலாம். நெய்வேத்தியமாக பொரிகடலை, பழங்கள் போன்றவற்றை படைக்கலாம். அதோடு முருகப்பெருமானின் காயத்ரி மந்திரம், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், கந்த குரு கவசம் முருகன் ஸ்தோத்திரங்கள் இதையெல்லாம் நாம் வேல் முன்பு அமர்ந்து மனமுருகி பாராயணம் செய்வது அவசியமாகும்.

இவ்வாறு வேல் பூஜை செய்த பிறகு தொடர்ந்து 21 நாட்கள் நம் வீடுகளில் இவ்வாறு மந்திரங்களை பாராயணம் செய்தும் வழிபாடு செய்வது அவசியம். இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் வீடுகளில் எப்பேர்ப்பட்ட தடைகளும் தாமதமும் பொருளாதார சிக்கலும் திருமண தடையும் இருந்தால் முருகப்பெருமானுடைய அருளால் அவை விலகும்.

வீடுகளில் இந்த முறையில் வேல் பூஜை செய்யும் பொழுது நம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் கொண்டு வந்து சேர்ப்பதோடு வீட்டிற்கு தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து நம்மை காக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US