கோயிலுக்கு செல்லும் முன்: மறந்தும் கூட இந்த தவறுகளை செய்ய வேண்டாம்
நம் வேண்டுதல்கள் நிறைவேற, மன சங்கடங்கள் நீங்க, அமைதிக்காக இப்படி பல காரணங்களுக்காக திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்கிறோம்.
முற்று முழுதாக இறைவனை மட்டுமே மனதில் ஏந்திக்கொண்டு திருத்தலங்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.
அப்படி செல்லும்போது ஒரு சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், அது என்னவென்று பார்க்கலாம்.
* இறைவனை தரிசிக்க வெறும் கைகளுடன் சென்று விடாதீர்கள், குறைந்தபட்சம் பூக்களையாவது வாங்கிச் செல்லுங்கள்.
* பிறப்பு/இறப்பு போன்ற தீட்டு வீடுகளுக்கு சென்று விட்டு கோயிலுக்கு செல்லக்கூடாது, குளிக்காமலும் செல்லக்கூடாது.
* கோயிலுக்கு செல்லும் போது ஆண்கள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தியும், பெண்கள் இரு கைகளை நெஞ்சோடு வைத்து கும்பிட வேண்டும்.
* கோயிலுக்குள் சென்ற பின்னர் சுவாமி சன்னதிகளை அவசரமாக வலம் வருதல் கூடாது, சுவாமிக்கும், நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது.
* கோபம், பழி உணர்வு, வெறுப்பு போன்ற எந்தவித கெட்ட எண்ணங்களையும் மனதில் சுமந்தபடி செல்லக்கூடாது.
* ஆடைகளிலும் கவனம் செலுத்த வேண்டும், இறுக்கமான உடைகள், அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்கு செல்லக்கூடாது.
* கோயிலில் கோபத்தை வெளிப்படுத்துவது, சண்டையிடுவது, படுத்து உறங்குவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
* குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வது நல்லது, பரிகார தலங்களுக்கு சென்று வந்தால் நேரடியாக உங்கள் வீட்டிற்கே செல்ல வேண்டும்.
* காலை மற்றும் மாலை நேரங்களில் இறைவனை தரிசித்துவிட்டு கோயிலை சுற்றி வருவது சிறப்பு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |