கையில் கட்டும் கயிறு எத்தனை நாட்கள் வரை பலன் தரும்?
இந்து மதத்தில் கோயிலில் இருந்து பெறப்பட்ட கயிறை பக்தர்கள் நம்பிக்கையுடன் கட்டுவார்கள்.
மந்திரிக்கப்பட்ட அல்லது கோயிலில் இருந்து பெறப்படும் கயிறில் உள்ள பவர் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே அதில் இருக்கும்.
அப்படி கட்டப்பட்ட கயிறு வருட கணக்கில் காட்டாமல், குறிப்பிட்ட நாட்களில் அந்த கயிறை கழற்றி விட வேண்டும்.
இந்து சாஸ்திரப்படி கயிறுக்கு 21 நாட்கள் மட்டுமே சக்தி இருக்கும். அதன் பிறகு அதில் இருக்கும் சக்தி வெளியேறிவிடுவதாக கூறப்படுகிறது.
அதுவும், அந்த கயிற்றை ஓடும் நதியில் வீசுவது மங்களகரமானது என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் ஒரு முறை தவறியும் கூட கயிறு கழன்று விட்டால், அதில் இருக்கும் சக்தி போய்விடும்.
அப்படி கழன்றால் புதிய கயிற்றை தான் கட்ட வேண்டுமே தவிர, அதே கயிற்றை கட்ட கூடாது.
மேலும், ஆண்கள் பொதுவாக கயிற்றை வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்ட வேண்டும் என்றே இந்து சாஸ்திரம் கூறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |