முன்னோர்களால் ஏற்படும் சாபத்தை போக்க என்ன செய்யவேண்டும் ?
சில குடும்பங்களில் என்ன வேலை செய்ய தொடங்கினாலும் தடங்கல் என்று ஏறட்டு கொண்டு இருக்கும்.அப்படியாக ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மனம் நொந்து யார் யார் செய்த பாவமோ என்ன சாபமோ ஏன் ஏ=இத்தனை துன்பங்கள் இறைவா காப்பாற்ற கூடாதா என்று புழும்புவதுண்டு.
அப்படியாக இக்கட்டான சூழலில் இருக்கக்கூடியவர்களுக்கான பரிகாரங்கள் தான் இது. முற்காலத்தில் தர்மம் மீறியவர்கள் மீது முனிரவர்கள் சாபம் கொடுத்திருப்பதை பாத்திருக்க முடியும்.
ஆனால் அப்பொழுதும் எப்பொழுதும் மனம் நொந்து போக அவர்கள் செய்வதறியாது மனிதரும் சாபம் கொடுக்கிறன்றனர். ஒருவரின் சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் தான் எந்த சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியும்.
அதனைக் கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும். ஜோதிடப்படி, ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்.
சில சாபங்களையும் அதற்குரிய பரிகாரங்களையும் இங்கு பார்க்கலாம். சுமங்கலி சாபம் : சுமங்கலி சாபம் விலக அதிகார நந்தியை, திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும்.
சகோதர சாபம்
சகோதர சாபம் விலக அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் விமோசனம் பெற இயலும்.
பெற்றோர் சாபம்
பெற்றோர்களால் ஏற்படும் சாபங்கள் விலக பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். அவர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பவர் என்பதால் அதற்கு முன்னறிவிப்பாக மூன்றுமுறை அவரது சன்னதியில் மெதுவாகக் கைத்தட்டி அதன்பிறகு தகவலை எடுத்துரைத்துப் பிறகு அபிஷேகம் செய்வது நல்லது.
ஆசிரியர் சாபம்
ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும். இதுபோன்று மற்ற சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைச் செய்தால் நிச்சயமாக சாப விமோசனத்தை நாம் பெற இயலும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |