சாய் பாபா பக்தரா நீங்கள்? ஷீரடி போனால் கட்டாயம் இந்த இடத்திற்கு சென்றுவாருங்கள்
சாய் பாபா ஷீர்டியில் தங்கியிருந்த ஆரம்ப நாட்களில், ஷீர்டி கிராமத்தின் புறநகர்ப் பகுதிகளிலும், அருகிலுள்ள முட்கள் நிறைந்த காடுகளிலும் அலைந்து திரிந்தோ அல்லது வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தோ நேரத்தைக் கழித்தார்.
பாபாவை ஒரு துறவியாகக் கருதிய கிராமவாசிகளில் முதல் குழு மல்சாபதி, தாத்யா கோட், பயாஜி பாய் மற்றும் இன்னும் சிலர். பாபா ஒரு தெய்வீக துறவியாக இருப்பதை அந்த காலத்தில் வாழ்ந்த நிறைய பேர் உணர்ந்து உள்ளனர்.
அதில் ஒருவர் தான், பாபாவால் ஆழ்ந்த உந்துதல் பெற்ற பயாஜி பாய், அவர் பாபாவை தன் மகனாக பார்த்தார் தனது தாய்ப் பாசத்தால் தினமும் நண்பகலில், பல மைல்கள் காட்டில் நடந்து, அவரைத் தேடி, கூடையில் பாபாவுக்கான உணவை தலையில் சுமந்து செல்வார்.
பெரும்பாலும் பாபா ஏதோ ஒரு மரத்தின் கீழ் ஆழ்ந்த தியானத்தில், அமைதியாகவும் அசையாமல் அமர்ந்திருப்பதைக் பார்பாராம். அப்போதெல்லாம் அவள் தைரியமாக அணுகி, அவர் முன் ஒரு இலையை வைத்து, ரொட்டி, காய்கறிகள் போன்றவற்றைப் பரப்பி, அவரை சாப்பிட வற்புறுத்தி, உணவு உண்ண வைப்பாரம் பாபா உண்ட பின்னர் தான் தனது உணவுக்காக தனது வீட்டிற்குத் திரும்புவாள்.
பாபாவுக்கு ஷிரடியில் உணவளித்து முதன் முதலில் கவனித்துக்கொண்டதும் அவளேதான். பய்யாஜி பாயின் சந்ததியினர் அனைவரும் பணக்காரர்களாக இருந்தனர், அவர்களின் குடும்பம் செல்வந்தர்களாக மாறியது.
இன்றும் கூட, அவர்களின் குடும்பத்தில் யாரும் பாபாவுக்கு நைவேத்யமாக படைக்காமல் எந்த உணவையும் தொடுவதில்லை. பால்கி ஊர்வலத்தின் போது பாபாவின் உருவப்படத்தையும் பாதுகைகளையும் எடுத்துச் செல்லும் பெருமையை ஷீர்டி சாய்பாபா சன்ஸ்தான் அவர்களின் சந்ததியினருக்கு வழங்கியது.
அது அவர்களுக்கு ஒரு பெரிய மரியாதை பாய்ஜா பாயின் ஐந்தாவது தலைமுறை இப்போது ஷீர்டியில் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் சாய்பாபா வைத்து இருந்த சுகுக்கு பையையும் சில நாணயங்களையும் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். அதனை பற்றி தெளிவாக இந்த காணொளியில் காணலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |