பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம் இருக்கும் அம்மன்
தமிழ்நாட்டின் சக்தி திருத்தலங்களில் மிகவும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம்.
இங்கு வீற்றிருக்கும் மகா மாரியம்மன் சர்வ சக்தி பொருந்தியவளாக வீற்றிருந்து பக்தர்களுக்கு நல்லருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம் கடைசி ஞாயிறு தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும்.
ஆயிரம் ஆயிரம் கிலோ வண்ண வண்ணப் பூக்களின் குளிர்ச்சியினால், கோடை வெப்பம் தணிந்து மாரியம்மன் குளிர்ந்ததொரு அம்மனாக மாறிப் போயிருப்பாள்.
சமயபுரம் மாரியம்மன் தனது பக்தர்களுக்கு நோய் நொடி மற்றும் தீவினைகள் அண்டாதிருக்க வேண்டி, அம்மனே விரும்பி வேண்டி விரதம் மேற்கொள்கிறாள்.
அதுவும் தொடர்ந்து இருபத்தியெட்டு நாட்கள் விரதமாக மேற்கொள்கிறாள் சமயபுரத்தாள். பச்சைப் பட்டினி விரதமாக கடும் விரதம் இருக்கிறாள்.
அந்த 28 நாட்களிலும் சமயபுரம் மாரியம்மனுக்கு அமுது படையல் படைப்பதில்லை, அதற்கு பதிலாக அம்மனுக்கு நீர்மோர், பானகம், இளநீர், கரும்புச்சாறு போன்ற திரவ வடிவிலானவைகள் தான் அருந்திட சமர்ப்பிக்கப்படும்.
பச்சைப்பட்டினி விரதம் நிறைவு பெரும் நாளில், சித்திரைப் பெருந்தேர் திருவிழாவுக்காகக் கொடியேற்றம் நிகழும்.
சித்திரை மாதம் பிறந்து வருகின்ற முதல் செவ்வாய்க்கிழமை (16.04.2024) அன்றைக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு திருத்தேர் நடைபெற்றது.
பக்தர்களுக்காகவே பச்சைப்பட்டினி விரதம் பூண்டிருக்கும் சமயபுரம் மாரியம்மனை, பக்தர்கள் தரிசிக்க வருவது மிகவும் உகந்தது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |