இறைவனுக்கே தூது சொல்லும் சக்தி வாய்ந்த தூதுவளை தூபம்

By Sakthi Raj Dec 19, 2024 12:13 PM GMT
Report

ஒரு சிலர் வீட்டில் தொடர்ந்து காரிய தடங்கல் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.அதை மீறி காரியம் தொடங்கினாலும் தோல்வியில் தான் முடியும்.இதற்கு பல காரணங்கள் இருக்கும்.ஒருவருக்கு குலதெய்வ கோபம் இருந்தாலும் இவ்வாறு நடக்கும்.

அல்லது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கமுடியும்.இவ்வாறான பிரச்சனையை நாம் மெதுவாகத்தான் சரி செய்யமுடியும் ஆனால் நிச்சயம் அதில் இருந்து மீண்டு விடலாம்.

அப்படியாக வீட்டில் தொடர்ந்து நஷ்டம்,தடை ஏற்பட்டு கொண்டே இருப்பதை தடுக்க இந்த முறையில் தூபம் போட்டால் ஒரு சிறந்த மாற்றத்தை காண முடியும். ஒரு சிலருக்கு பரம்பரையாக ஒரு சில தோஷங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இறைவனுக்கே தூது சொல்லும் சக்தி வாய்ந்த தூதுவளை தூபம் | Sambirani Thunbam Nanmaigal

அதனால் பலரும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.இப்பொழுது அது அடுத்த தலைமுறையையும் தாக்கி கொண்டு இருக்கும்.அந்த நேரத்தில் நாம் இறைவனை காண வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்புகள் சரியாக அமையாது.எதற்கெடுத்தாலும் பிரச்சனை தோல்வி என்றே இருக்கும்.

அதாவது நம் குடும்பத்தின் கண்களையே கட்டி விட்டது போல் அனைவரும் ஒரு சேர துன்பத்தில் இருப்போம்.இதற்கான சிறந்த தீர்வு தான் தூபம் போடுதல்.நாம் எந்த காலமும் தூபம் போடுவதை குறைத்து மதிப்பிட கூடாது.

2025ஆம் ஆண்டு முதல் கிரகப்பெயர்ச்சி-எந்த ராசிகளுக்கு வெற்றி

2025ஆம் ஆண்டு முதல் கிரகப்பெயர்ச்சி-எந்த ராசிகளுக்கு வெற்றி

தூபத்திற்கு வீட்டில் உள்ள எப்பேர்ப்பட்ட எதிர்மறை சக்திகளையும் விரட்டும் ஆற்றல் உண்டு.அந்த வகையில் காரிய தடை விலக தூபம் போடும் பொழுது துளசி விதைகள் மற்றும் தூதுவளை பொடியைத் தூபத்தில் போட்டு அந்த புகையை வீட்டின் எல்லா பகுதிகளிலும் காண்பிக்க வேண்டும்.

பின் வாசலும் வீட்டின் ஒரு முக்கியமான அங்கம். அங்கேயும் சுற்றி காண்பிக்க வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செவ்வாய்,வெள்ளிக்கிழமை போட்டு வர குலதெய்வம் உங்கள் வீட்டை தேடி வரும்.மேலும் நாம் போடும் தூதுவளைக்கு இறைவனுக்கே தூது சொல்லக்கூடிய சக்தி உண்டு.

ஆக எதற்கும் மனம் வருந்தாமல் இறைவழிபாட்டில் சில முயற்சிகள் மேற்கொள்ள நாம் சிறந்த மாற்றத்தை காணமுடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US