அஸ்தமனம் ஆகும் சனி.. இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்ட காலம் தான்

By Sakthi Raj Mar 10, 2026 07:13 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரப்படி சனி அஸ்தமனம் என்பது மிகவும் எதிர்மறை தாக்கத்தை கொடுக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த நேரங்களில் தந்தை மகனுக்கு இடையான கருத்து வேறுபாடுகள் வேலை பளு மற்றும் பிரச்சனைகள் அதிகரிக்க கூடும் என்ற சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையில் தனி அஸ்தமனம் என்பது எதிர்மறை விளைவுகளை தான் கூடும் என்பது இல்லை. அவை சில ராசிகளுக்கு நேர்மறை விளைவுகளையும் கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்கள் சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு நிம்மதி பெறக்கூடிய காலமாகவும் அமையும்.

அந்த வகையில் மார்ச் 13ஆம் தேதி அஸ்தமித்து மே 26 ஆம் தேதி உதயமாகுவார். மொத்தம் 76 நாட்கள் சனி அஸ்தமன நிலையில் பயணிக்கிறார். இந்த நிலையில் சனி பகவானுடைய அஸ்தமன நிலையானது ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொற்காலமாகவே அமையப்போகிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

அஸ்தமனம் ஆகும் சனி.. இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்ட காலம் தான் | Sani Asthamanam Bring Luck To This 4 Zodiac 

ஆரம்பம் ஆகும் சுக்கிரன் பெயர்ச்சி: பெயர் புகழ் பெரும் ராசிகள் யார்?

ஆரம்பம் ஆகும் சுக்கிரன் பெயர்ச்சி: பெயர் புகழ் பெரும் ராசிகள் யார்?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக சிந்தித்துக் கொண்டிருக்கின்ற விஷயத்தை செய்யக்கூடிய ஆற்றலை பெறுவீர்கள். தொழில் ரீதியாக பின்னடைவில் இருந்தவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். செலவை கட்டுப்படுத்தி சேமிக்க கூடிய ஆற்றலை பெறுவீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவானுடைய இந்த மாற்றமானது இவர்களுக்கு கடின உழைப்பை கொடுத்து அதற்குரிய பலனை பெற போகிறார்கள். நீண்ட நாட்கள் வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்று இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். காதல் மற்றும் திருமண தொடர்பான பேச்சுகளில் நல்ல முடிவு உண்டாகும்.

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

தனுசு:

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நீண்ட நாட்கள் சுபகாரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். பெரியவர்களின் முழு ஆசிர்வாதத்தையும் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் வேலையில் உங்களுக்கு தேடி வரும். உங்களின் திறமையை வெளிக்காட்டுவீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நிலம் தொடர்பான விஷயங்களில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த மன சங்கடங்கள் மற்றும் கசப்புகள் விலகும். எதையும் புத்திசாலித்தனத்தோடு அணுகுவீர்கள். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மன அழுத்தம் விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US