சனி பகவானுக்கு மிகவும் பிடித்த அந்த மூன்று ராசிகள்

By Sakthi Raj Jun 21, 2024 06:30 AM GMT
Report

சனி பகவான் என்றாலே அளவு கடந்த துன்பம் தருவார் என்ற பயம் தான் எல்லோர்மனதிலும் இருக்கும்.எவ்வளவு மண்டாடினாலும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சனி பகவானிடம் நாம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடியாது.

அப்படியாக சனி பகவானுக்கு பிடித்த மூன்று ராசி இருக்கிறார்கள்.என்னதான் சனி திசை நடந்தாலும் இந்த மூன்று ராசிகளுக்கு சனி பகவான் எப்பொழுதும் நல்லாசியை வழங்குபவராக இருக்கிறார்.அந்த மூன்று ராசிகள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த அந்த மூன்று ராசிகள் | Sani Bagavanuku Piditha Raasigal Sani Peyarchi

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசி பட்டியலில் ரிஷப ராசி முதன்மை வைக்கிறது.ரிஷபத்தின் அதிபதியான சுக்கிரன், சனி பகவானின் கர்மாவின் படி, பலன்களைத் தருகிறார். சுக்கிரன் மற்றும் சனியின் நட்புறவால், ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் நன்மையே அள்ளி வழங்குகிறார். என்னதான் பெரிய துன்பம் வந்தாலும்.அதில் இருந்து மீண்டு வாழ்க்கையில் எப்பொழுதும் போல் இவர்களை வாழ வைக்கிறார் சனி பகவான்.மேலும் ரிஷப ராசியினருக்கு பொருளாதார நெருக்கடிகள் எப்பொழுதும் குறைவு தான்.

துலாம்

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த அந்த மூன்று ராசிகள் | Sani Bagavanuku Piditha Raasigal Sani Peyarchi

சனிபகவானுக்கு மிகவும் பிடித்த ராசி பட்டியலில் இரண்டாம் பிடிப்பது துலாம் ராசியினர். துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் எப்போதும் சாதகமாக இருப்பார்.

துலாம் ராசி சனியின் உச்ச ராசியாகும். இந்த ராசி காரர்களுக்கு சனி பகவான் எப்பொழுதும் சுகபோக வாழ்க்கையை வழங்குகிறார். சுக்கிரனுக்கு பிடித்த ராசியாகவும் துலாம் இருக்கிறது.

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்- நேரலை

திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கோவில் தேரோட்டம்- நேரலை


துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் நேர்மை குணம் கொண்டவர்களாகவும்,வஞ்சகத்தன்மை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.ஆக சனி பகவானுக்கு பிடித்த ராசி இடத்தை பெற்று விட்டனர்.

கும்பம்

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த அந்த மூன்று ராசிகள் | Sani Bagavanuku Piditha Raasigal Sani Peyarchi

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசி பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பது கும்பம். சனியின் முக்கிய திரிகோண ராசி கும்பம். இந்த ராசிக்கு கணவர் சனி. இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் எப்போதும் உண்டு.

31 ஆண்டுகளுக்குப் பிறகு சனி அவருக்கு மிகவும் பிடித்தமான கும்ப ராசியில் தற்போது இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு பல்வேறு சவால்கள் இருந்தாலும், அதை எளிதில் சமாளிக்கும் ஆற்றலை சனி பகவான் வழங்குவார்.

ஆக இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிக பெரிய துன்பம் என்பது இருக்காத அளவு சனி பகவான் அருளாசி வழங்குகிறார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US