வாழ்க்கையில் சனி தோஷம் இருப்பதற்கான 6 அறிகுறிகள்
சனி தோஷம் என்பது ஒருவர் வாழ்க்கையில் சனி கிரகம் பலவீனமாகவோ அல்லது தவறான ஒரு கட்டங்களில் அமைந்திருக்கும் போது வரக்கூடிய ஒரு நிலையாகும். நவக்கிரகங்களில் சனி பகவான் நீதிமானாக விளங்க கூடியவராக இருக்கிறார். இவர் தான் ஒரு நபருடைய ஒழுக்கம் உழைப்பு ஆயுள் போன்றவை காரணியாக இருக்கிறார்.
அப்படியாக ஒருவருக்கு சனி தோஷம் ஜாதகத்தில் இருக்கிறதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது? அந்த சனி தோஷம் நமக்கு இருப்பதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
சனி தோஷம் என்பது சனி கிரகமானது ஒருவருடைய ஜாதக கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் இருக்கும் பொழுது அல்லது சந்திரனுடன் இணைந்து இருக்கும் பொழுது இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் சனி தோஷம் இருப்பவர்களுக்கு ஒரு சில அறிகுறிகள் அவர்கள் வாழ்க்கையில் வருகிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. ஒருவர் ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு தொடர்ந்து செய்யும் காரியங்களில் தோல்விகளும் தடைகளும் தாமதங்களும் வந்து கொண்டிருக்கும். இவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் ஒரு சிறந்த முன்னேற்றம் இருப்பதில் எப்பொழுதும் தடைகளை சந்தித்துக்கொண்டே இருக்கக்கூடும்.
2. அதே போல் எப்பொழுது எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் எதிர்பாராத விதமாக அவர்களுக்கு பண நெருக்கடிகள் அல்லது வீண் செலவுகளை அவர்கள் சந்திக்க கூடும்.
3. மனதில் தேவையில்லாத பயம் காரணம் இல்லாமல் பதற்றம் மன அழுத்தம் தனிமை உணர்வு தூக்கம் இல்லாத நிலை கனவுகளில் தொல்லை போன்ற நிலை உருவாகும்.
4. மேலும் சனி தோஷம் இருப்பவர்களுக்கு என்னதான் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது செய்தாலும் குடும்பத்தினர் இவர்கள் பேசுவதை தவறாகவே எண்ணி இவர்களிடம் சண்டையிடுவதை நாம் காணலாம்.
5. அதைப்போல் ஒரு சிலருக்கு மூட்டு வலி பற்கள் அல்லது எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்கப்படும் அதிக உடல் சோர்வு மன அழுத்தத்தால் இவர்களுக்கு உண்டாகும்.
6. இவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் திடீரென்று வேலை நிறுத்தம். வேலையில் முன்னேற்றத்திற்கான தாமதம் தடைகள் மற்றும் சம்பள உயர்வு வரும் பொழுது அதில் தடைகள் போன்றவை இவர்கள் பணியிடத்தில் சந்திக்கக்கூடிய ஒரு குறைபாடுகளாக இருக்கிறது.
சனி தோஷம் விலக செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
சனி தோஷம் உங்களுடைய ஜாதகத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் சனிபகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.
முடிந்தவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது இவர்களுக்கு சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.
அதோடு தொடர்ந்து சனி பகவான் உடைய “ஓம் சனைச்சராய நமஹ:” நாமத்தை அவர்கள் உச்சரித்து வந்தாலும் சனிபகவானின் தாக்கம் குறைந்து காணப்படும்.
அதோடு இவர்கள் தானம் வழங்குவது இவர்களுக்கு மிகவும் சிறந்த புண்ணியத்தை தேடி கொடுக்கும். சனிக்கிழமைகளில் இவர்கள் கருப்பு எள் கருப்பு துணி இரும்பு பொருட்கள் அல்லது நல்லெண்ணையை தானமாக பிறருக்கு கொடுக்கலாம் நல்ல பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







