சனி பெயர்ச்சி 2025:சனியின் அருளால் பணமழையில் நனைய போகும் அதிர்ஷ்ட ராசிகள் யார்?
நவகிரங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.இவர் ஒரு மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்ப அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்.ஆக,ஒருவர் தவறு செய்து விட்டு சனி பகவானிடம் இருந்து தப்பித்து செல்ல முடியாது.அதே போல ஒன்பது கிரங்கங்களில் மிகவும் மெதுவாக நகர கூடியவர் சனி பகவான்.
அதவாது சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்து கொள்கிறார்.அப்படியாக சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.அவர் தற்போது மீன ராசிக்கு செல்லவிருக்கிறார்.இதனால் பல ராசிகளுக்கு ஓரி விதமான தாக்கத்தை உண்டாக்க போகிறது.அவை எந்த ராசி என்று பார்ப்போம்.
கன்னி:
சனி பகவானின் 2025 ஆம் ஆண்டு மீன ராசி பயணம் கன்னி ராசிக்கு புது யோகத்தை கொடுக்க உள்ளது.இவர்கள் தொழிலை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை செய்வார்கள்.சிலருக்கு தொலை தூரத்தில் இருந்து நற்செய்திகள் வரும்.திருமணம் பாக்கியம் நல்ல விதமாக அமையும்.சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும்.
மகரம்:
சனி பகவானின் 2025 ஆம் ஆண்டு மீன ராசி பயணம் மகர ராசிக்கு எதிர்பாரா யோகத்தை கொடுக்கப்போகிறது.இவர்கள் எந்த வேலை செய்தாலும் இந்த காலகட்டத்தில் நல்ல பலனை கொடுக்கும்.தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளது.ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும் நேரம்.
மீனம்:
சனி பகவான் மீன ராசியில் நேரடியாக நுழைய உள்ளார்.இதனால் இவர்களுக்கு மனதில் நேர்மறையான எண்ணங்கள் உருவாகும்.சிலர் கடின உழைப்பால் நல்ல லாபம் பெறுவார்கள்.திடீர் அதிர்ஷ்டம்,வாய்ப்புகள் தேடி வரும்.உங்களுடைய விடாமுயற்சியால் நினைத்ததை சாதிப்பீர்கள்.பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |