பெயர் மாற்றினால் கர்ம பலன் குறையுமா?
மனிதன் அவன் மனம் போகும் வழியில் தவறு செய்து பிறரை காயப்படுத்தி கட்டாயம் வாழ முடியாது.காரணம் அவன் புத்தி சாதுரியத்தால் மனிதர்களிடம் இருந்து தப்பித்து கொள்ளலாம் ஆனால் ஒரு பொழுதும் இறைவன் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
அப்படியாக,தவறு செய்பவன் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.தான் செய்யும் செயல் பாவத்தை உண்டாக்கும் என்று தெரிந்தும் அவனுடைய லாபத்திற்காக துணிந்து செயல்படுகின்றான்.அன்றைய சூழலில் அவன் காரிய வெற்றி அடையலாம்.ஆனால் அதற்கான கர்ம பலனை அவன் விரைவில் பிரபஞ்சத்தால் அனுபவிக்கப்படுவான்.
பிறகு,மனம் திருந்தி செய்த தவறுக்கான பரிகாரம் தேடுவார்கள்.ஆக இது அவன் செய்யும் செயலால் அவனுக்கு கர்ம பலனை கொடுக்கக்கூடியது.இன்னும் சிலருக்கு அவர்கள் பரம்பரை கர்ம பலன் இருக்கும்.அல்லது பெற்றோர்கள் கர்ம பலன் இருக்கும்.
இவ்வாறு அவர்களை துன்பத்தில் ஆழ்த்தும் கர்மபலனில் இருந்து அவன் எவ்வாறு தப்பித்து கொள்வது.ஒருவர் பெயரை மாற்றிக்கொள்வதால் கர்ம பலனை குறைக்க முடியுமா?அதற்கான தீர்வு என்ன என்பதை விளக்கமாக பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |