இன்றைய ராசி பலன்(08.02.2025)

Report

மேஷம்:

இன்றும் பலருக்கும் வேலை பளு அதிகரித்து அலைச்சல் உண்டாகும்.புதிய நபரின் அறிமுகத்தால் சிலருக்கு தொழிலில் நல்ல ஆதாயம் இருக்கும்.குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.

ரிஷபம்:

பணத்தை கையாளும் பொழுது கவனமாக கையாள வேண்டும்.ஒரு சிலர் இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.நன்மையான நாள்.

மிதுனம்:

செய்த தவறை பற்றி மனம் வருந்தும் நாள்.சிலருக்கு சில கால சூழ்நிலையால் சங்கடங்கள் உருவாகும்.அதை மூன்றாம் நபரின் உதவியால் சரி செய்வீர்கள்.மன அமைதி காக்க வேண்டிய நாள்.

கடகம்:

வேலை பளுவிற்கு ஆளாவீர். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் முயற்சி நிறைவேறும்.வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்.வரவை விட செலவு அதிகரிக்கும்.

சிம்மம்:

இன்று குடும்பமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வதால் பெரிய சண்டைகளை தவிர்க்க முடியும்.தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்தவேண்டும்.

கன்னி:

நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டானாலும் இறுதியில் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.மனக் குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

புதனின் இடமாற்றத்தால் செல்வத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் யார்?

புதனின் இடமாற்றத்தால் செல்வத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் யார்?

துலாம்:

இன்று உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.சிலர் மதியம் மேல் மருத்துவமனை செல்லும் நிலை உருவாகலாம்.குடும்பத்தினர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.வேலையில் கவனமாக இருக்கவேண்டும்.

விருச்சிகம்:

பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.வாகனப் பயணத்தில் சங்கடம் தோன்றும்.வண்டி வாகனத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

தனுசு:

இன்று மனதில் ஒருவித சந்தோசம் உருவாகும்.சிலர் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொள்வர்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்திகள் தேடி வரும்.வேலை செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்:

நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

கும்பம்:

நினைத்த வேலைகளை உடனே முடிக்க முடியாமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.பிள்ளைகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். யோசித்து செயல்படுவது நல்லது.

மீனம்:

ஒரு சிலருக்கு மதியம் மேல் அலைச்சல் அதிகரிக்கும்.மன சோர்வடையும்.குழந்தைகளிடம் பேசும் பொழுது வார்த்தையில் கவனம் கொள்ளவேண்டும்.உங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

             

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US