சனி நட்சத்திர பெயர்ச்சி - கொட்டப்போகும் அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளும் ராசிகள்
வரும் மார்ச் 21-ஆம் தேதியன்று, சனி பகவான் தனது நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார் இதனால் சில ராசிகள் தங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை பெறப்போகின்றனர் அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. ஜோதிடத்தில் சனி பகவானை நீதி கடவுளாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் வரும் மார்ச் 21-ஆம் தேதியன்று, சனி பகவான் தனது நட்சத்திர பாதத்தை மாற்றப் போகிறார். இதனால் சில ராசிகள் போதும் போதும் என்ற அளவிற்கு நன்மைகள் குவியப்போகின்றது.
தற்போது மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வரும் சனி பகவான், 'உத்திரட்டாதி' நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழையவுள்ளார். எனவே இந்த நட்சத்திர மாற்றம் எந்த ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- சனியின் இந்த மாற்றம் மேஷத்திற்கு சாதகமான சூழல் அமையும்.
- உங்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருந்தாலும் வாழ்க்கையில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தற்போது நடக்கும்.
- உடல்நலம் நீண்ட காலமாக உங்களை தொந்தரவு செய்தால் தற்போது அது சரியாகும்.
- தடங்கல்களுடன் தடைபட்டிருந்த உங்கள் வேலை தற்போது நல்லபடியாக நடக்கும்.
சிம்மம்
- அதே போல் சனிப்பெயர்ச்சியில் 'அஷ்டமச் சனி'யின் தாக்கம் இருக்கும்.
- ஆனால் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல காரியங்கள் இந்த நேரத்தில் நடைபெறும்.
- தொழிலில் பணம் கொட்டும், பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும்.
- முயற்ச்சி செய்து தொடங்கும் வேலை வெற்றி பெறும்.
தனுசு
- தனுசு ராசியினருக்கு இந்த நட்நத்திர மாற்றம் எடுக்கும் விடயத்தில் எல்லாம் வெற்றியடைய வைக்கும்.
- சனி பகவான் மூன்றாம் வீட்டிற்குப் பெயர்ச்சி அடைவது, தன்னம்பிக்கையை அதிகரிக்கும், வெற்றியையும் தேடித்தரும்.
- திடீர் பணவரவு உட்டாகும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
- புதிய பொருட்கள் நினைத்த பொருட்கள் வாங்குவீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).