சனிப்பெயர்ச்சி:சூரிய கிரகணத்தால் அதிரடி மாற்றத்தை பெற போகும் ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரப்படி 9 கிரகங்களில் சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.சனி பகவான் கர்மங்களை அழிக்க கூடிய கிரகமாக விளங்குகிறார்.ஜோதிட சாஸ்திரத்தில் சனிப் பெயர்ச்சியும் சூரிய கிரகமும் சிறப்பு வாய்ந்தவை. வேத நாட்காட்டியின்படி, 29 மார்ச் 2025 அன்று சனி தனது ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
அன்றைய நாளில் ஒரு பகுதி சூரிய கிரகணமும் இருக்கும். சனியின் ராசி மாற்றமும் சூரிய கிரகணமும் இணைந்து பல ராசிகளுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.அப்படியாக இந்த சூரிய கிரகணத்தால் எந்த ராசிகள் அதிரடி மாற்றம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமும் சனிப் பெயர்ச்சியும் இணைந்திருப்பது மிக பெரிய அதிர்ஷடத்தை கொடுக்க உள்ளது.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.அலுவலகத்தில் நல்ல உயர்வு இருக்கும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.மனதில் ஒரு வித உற்சாகம் பிறக்கும்.உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் உங்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை கொடுக்க போகிறது.தொழில் தொடங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பொற்காலம்.புது புது விஷயங்களை கற்று கொள்ள நல்ல நேரம்.குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.மனதில் தெளிவு பிறக்கும்.வரும் எதிர்ப்புகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் மற்றும் சனிப்பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக அமைய போகிறது.இந்த வேளையில் உங்கள் சொத்து சம்பந்தமான விஷயம் நல்ல முடிவிற்கு வரும்.அலுவலகத்தில் புதிய விஷயங்களை கற்று கொள்வீர்கள்.சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |