ஜாதகத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பது நன்மையா? தீமையா ?
ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கையைபலரும் நல்ல விதமாக கருதுவது இல்லை. அந்த வகைகளில் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இணைந்து இருக்கிறது என்றால் அந்த ஜாதகர் எந்தவிதமான நன்மைகள்? தீமைகள்? பெறுவார்கள் என்று பார்ப்போம்.
செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் அந்த ஜாதகர் வம்பு வழக்குகளை சந்திக்க நேரலாம் அல்லது அந்த ஜாதகருக்கு வம்பு வழக்குகளை கையாளும் பெரிய பதவிகளில் இருக்கலாம். மேலும், செவ்வாய் சனி சேர்க்கை சமயங்களில் அந்த ஜாதகரை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்து விடுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய் சனி சேர்க்கையோடு சந்திரன் இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் மனரீதியாக அதிக போராட்டங்களை சந்திக்ககூடும்.
அந்த வகையில் செவ்வாய் சனி சேர்க்கை லக்கினங்களில் இருந்து எந்த வீட்டில் அமர்ந்திருந்தால் என்ன பலனை பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
லக்னத்தில் செவ்வாய் சனி இருக்கிறது என்றால் அவர்கள் உடல் நிலையை அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்.
லக்னத்தில் இருந்து இரண்டாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை அமையப்பெற்றால் கணவனும் மனைவியும் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு திருமணம் கால தாமதம் ஆகலாம்.
லக்னத்தில் இருந்து மூன்றாம் இடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் உடன் பிறந்தவர்களுடன் சண்டையும் வீண் வாக்குவாதமும் உண்டாகும்.
லக்னத்தில் இருந்து நான்காம் வீட்டில் செவ்வாய் சனி இருந்தால் அந்த ஜாதகரின் தாய்க்கும் அவருக்கும் சில விரிசல்கள் உண்டாகலாம். தாயின் உடல் நிலையில் அடிக்கடி சில ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.
லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாய் சனி இருக்கிறது என்றால் ஜாதகருடைய குழந்தைகள் இவருடைய பேச்சைக் கேட்க மாட்டார்கள். வீண் வம்பு வழக்குகள் இவர்கள் தேடி செல்லாமல் வந்து கொண்டிருக்கும்.
லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் அதிகப்படியான மருத்துவ செலவுகளை இவர்கள் சந்திக்க நேரும். சிலருக்கு கடன் சுமை அதிகரிக்கலாம்.
லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்காது. இவர்கள் இருவருமே ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்.
லக்னத்தில் எட்டாம் வீட்டில் செவ்வாய் சனி இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை துணையுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
லக்னத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சனி இருந்தால் தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே இருக்கும். வெளி நபர்களால் இவர்கள் பல வகையான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
லக்னத்தில் இருந்து பத்தாம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் இவர்களுக்கு நிரந்தரமான தொழில் என்பது இருக்காது. அடிக்கடி இவர்கள் அலுவலகத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். சமயங்களில் சிலருக்கு இந்த அமைப்பு சிலருக்கு புகழைத் தேடிக் கொடுக்கும்.
லக்னத்தில் இருந்து 11ஆம் வீட்டில் செவ்வாய் சென்றது என்றால் இந்த ஜாதகருக்கு தீர்க்கமான ஆயுளை கொடுப்பார். இருந்தாலும் சகோதரர்களிடையே பல பிரச்சினைகள் இவர்கள் சந்திக்க கூடும்.
லக்னத்தில் இருந்து 12ஆம் வீட்டில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருக்காது. நிம்மதியான தூக்கம் வருவதில் சிரமங்கள் உண்டாகும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







