தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.
வருடந்தோறும் ஆடி மாதம் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடி தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும்.
இந்நிலையில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடந்துவருகிறது.
திருவிழா கடந்த 11ஆம் திகதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தபசு திருநாள் ஜூலை 21ஆம் திகதி ஞாயிற்று கிழமை நடைபெறும்.
அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |