தலையெழுத்தை மாற்றும் சப்த கன்னிகள் வழிபாடு

By Sakthi Raj Oct 27, 2024 05:31 AM GMT
Report

மனிதன் நம்முடைய பிறப்பு ஒரு அதிசயம் தான்.சாஸ்திரத்தில் ஏழு பிறவிகள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.ஆனால் எதுவும் சாட்சி பட இன்றளவும் நமக்கு தெரிந்தது இல்லை.அப்படியாக நாம் எத்தனை பிறவிகள் எடுப்போம்?அந்த பிறவியில் எந்த நாட்டில் பிறப்போம்?

மனிதனாகவா அல்லது மிருகமாகவா நம்முடைய பிறப்பு நாம் கணிக்க முடியாதது.ஆனால் எந்த பிறவி எடுத்தாலும் எந்த நாட்டில் பிறந்தாலும் மனிதனாக பிறந்தால் தர்மத்தோடும் பிறரை துன்புறுத்தாமல் வாழ வேண்டும் என்பது தான் ஒரே கோட்பாடு.

ஏனென்றால் நாம் செய்யும் வினைக்கு ஏற்ப நாம் பலனை அடைந்து விடுவோம்.அதாவது நன்மை செய்ய அது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்மை பாதுகாக்கும்,தீவினை செய்தால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை நம்மை தாக்க கூடும் என்று நம்பபடுகிறது.

தலையெழுத்தை மாற்றும் சப்த கன்னிகள் வழிபாடு | Saptha Kannigal Vazhipadu

அந்த வகையில் நாம் தெரியாமல் செய்த பாவத்தை நாளடைவில் தான் தெரிந்து கொள்ள நேரிடலாம்.அவ்வாறு மனதார உணர்ந்து தவறை ஒப்புக்கொண்டு வருத்தம் அடைந்தாலே நம்முடைய பாதி பாவங்கள் கழிந்து விடும்.

அதிலும் இறைவனிடம் சரண் அடைந்து மனம் உருகி தவறை மன்னிக்கும் படி கேட்க கடவுள் அதற்கு நிச்சயம் நல்லதோர் தீர்வு தருவார். அப்படியாக நாம் சப்த கன்னிகள் வழிபாடு பற்றி கேள்வி பட்டு இருப்போம்.

பொதுவாக இந்த சப்த கன்னிகள் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்பட்டாலும் கிராமங்களில் அதிகம் அளவில் காணப்படுகிறது.இவர்கள் இவர்களை வழிபட உடனே நம்முடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது.

அந்த வகையில் நாம் தெரியாமல் செய்த தவறுகள் சூழ்நிலைகள் கொண்டு செய்த தவறை உணர்ந்து வருந்துபவர்கள் இந்த சப்த கன்னிகள் உடைய மந்திரம் சொல்ல அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்லதோர் மாற்றம் தெரியும்.

தலையெழுத்தை மாற்றும் சப்த கன்னிகள் வழிபாடு | Saptha Kannigal Vazhipadu

இந்த சப்த கன்னிகளின் மந்திரத்தை எப்பொழுது வேண்டும் ஆனாலும் உச்சரிக்க தொடங்கலாம். தொடர்ச்சியாக 7 நாட்கள் உச்சரிக்க வேண்டும். அதுவும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உச்சரிப்பது என்பது அதீத பலனை தரும்.

வீட்டு பூஜை அறையில் சப்த கன்னிகளின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஏழு தீபத்தை ஏற்றி வைக்கலாம் இயலாதவர்கள் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வைத்தாலே போதும்.

ஏற்றி வைத்து ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து இந்த மந்திரங்களை கூற வேண்டும்.

பிரம்மி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி
தந்நோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்

மகேஸ்வரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.

சனிக்கிழமை வெண்கடுகு தீபம் ஏற்றுவதால் வீட்டில் நடக்கும் மாற்றங்கள்

சனிக்கிழமை வெண்கடுகு தீபம் ஏற்றுவதால் வீட்டில் நடக்கும் மாற்றங்கள்

கௌமாரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத்

வைஷ்ணவி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ ப்ரசோதயத்

வாராகி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

இந்திராணி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ஐந்திரீ ப்ரசோதயாத்

சாமுண்டி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.






+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US