சனிக்கிழமை வெண்கடுகு தீபம் ஏற்றுவதால் வீட்டில் நடக்கும் மாற்றங்கள்
தெய்வங்களில் மிகவும் உக்கிரமான தெய்வம் வாராஹி அம்மன்.இவளை வழிபட நிச்சயம் நம்முடைய வாழ்வில் நிறைய மாற்றங்களை சந்திக்கலாம்.அதாவது வாராஹி அம்மன் நமக்கு மிக பெரிய தைரியம் கொடுப்பவள்.அப்படியாக சமயங்களில் மகிழ்ச்சியாக இருந்த வீட்டில் திடீர் என்று இருள் சூழ்ந்து காணப்படுவது போல் உணர்வு கொடுக்கும்.
அதற்கு காரணம் நம்மால் கண்டுபிடிக்க இயலாது.ஆனால் அவை நம் குடும்பத்தின் சந்தோஷங்களை பாதித்து இருக்கும்.அந்த நேரத்தில் நாம் மனம் குழப்பம் அடையாமல் வாராஹி அம்மனை சரண் அடைய வீட்டில் நல்லதோர் மாற்றம் காணமுடியும்.
அப்படியாக தீய சக்திகள் மற்றும் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை விரட்ட வாராஹி அம்மனுக்கு தீபம் ஏற்றும் வழிபாடு பற்றி பார்ப்போம்.
இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும்.சனிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.
இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபாடு செய்யலாம் அல்லது அருகில் வாராகி அம்மனின் ஆலயம் இருக்கும் என்றால் அங்கேயும் சென்று ஏற்றலாம்.இதற்கு வீட்டில் பயன்படுத்தாத புது அகல் விளக்கை எடுத்து கொள்ள வேண்டும்.ஆலயத்தில் தீபம் ஏற்றுவர்களாக இருந்தால் ஒவ்வொரு வாரமும் புதிதாக அகல் விளக்கை வாங்க வேண்டும்.
வீட்டில் ஏற்றுப்பவர்களாக இருந்தால் முதல் வாரம் மட்டும் புதிய விளக்கை வாங்கிக் கொள்ளலாம் பிற வாரங்களில் அந்த விளக்கையே திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக இதற்கு கருநீல துணியும் வெண்கடுகு வேண்டும்.
கருநீலத் துணியை சதுர வடிவில் வெட்டிக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெண்கடுகை வைத்து மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்ற வேண்டும்.
எப்படி நாம் சனிக்கிழமையில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோமோ அதே போல் வாராகி அம்மனுக்கு வெண்கடுகு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி நல்லதோர் மாற்றம் கிடைக்கும்.
பொதுவாகவே விளக்கு ஏற்றுவதற்கு பல விதமான நன்மைகள் இருக்கிறது.அபப்டியாக வாராஹி அம்மனை நாம் மனதார நினைத்து எந்த ஒரு வழிபாடு செய்தாலும் அம்பாளின் அருளால் நினைத்தது நிறைவேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |