கல்வியில் சிறந்து விளங்க சகலகலாவல்லி மாலை பாடல்
கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. சில குழந்தைகளுக்கு எந்த மெனக்கிடல்கள் இல்லாமலும் அவர்களுக்கு பாடம் புரிந்து விடும்.
ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும் அவர்களுக்கு படிப்பதில் சிரமம் ஏற்படும். அப்படியான குழந்தைகளுக்கு ஒரு தீர்வாக கண்டிப்பாக இறை வழிபாடு உதவும்.
உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் குமரகுருபரர். தனது ஐந்து வயது வரையிலும் பேசும் திறன் இல்லாமல் இருந்த அவர் திருச்செந்தூர் முருக பெருமான் அருளால் பேசும் திறன் பெற்றார்.
குமரகுபரர் சிறுவயதில் இருந்தே தல யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். ஒருமுறை கங்கைக்கு சென்ற அவர் அங்கு ஒரு மடம் ஒன்று அமைக்க எண்ணினார்.
அப்பொழுது அங்கு முகலாய ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. குமாரகுருபரர் எப்படியாவது மடம் ஒன்று அமைப்பது பொறுத்து அவர்களை சந்திக்க விரும்பினார்.
அதனால் தன் தவ வலிமையால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தி அதன் மீறு ஏறி அரண்மனைக்கு சென்ற அவரை பார்த்த முகலாய மன்னர் வியப்பில் ஆழ்ந்தாரே தவிர்த்து எதுவும் பேச வில்லை, காரணம் குமரகுருபரருக்கு அவர்கள் பேசும் மொழி தெரியாது.
மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்து விடுபட .குமரகுருபரர் சரஸ்வதி தேவியை நினைத்து தியானிக்கிறார்.
அப்பொழுது அவர் வாக்கில் இருந்து சகலகலா வல்லிமாலை என்னும் பத்து பாடல் பிறந்தது. அந்த பாடலை கேட்ட சரஸ்வதி தேவி அவருக்கு பிற மொழி பேசும் திறனையும் அருளினார்.
பிறகு முகலாய மன்னரிடம் பேசி காசி மடம் அமைக்க நிலத்தை பெற்றார். கங்கை கரையில் கேதார தோட்டத்தில் இந்த மடம் உள்ளது. இன்றும் சரஸ்வதி அருள் பெரு அங்கு மக்கள் செல்கின்றனர். இந்த மடத்தில் உள்ள குருவையும் வணங்கி சகலகலா வல்லி மாலை பாடி வர படிப்பில் சிறந்து விளங்குவர்
மண்கண்ட வெண்குடைக்
கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற்பணியச்செய்வாய்
படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிய
உண்டேனும்விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
மிக எளிமையான இந்த பாடலை பெற்றோர்கள் தன் குழந்தைகளுடன் சேர்ந்து பாட கல்வியில் சிறந்து விளங்குவர்.