சஷ்டி விரதம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த விரதம்.இந்த விரத நாளில் பலரும் முருகனிடம் பல பிராத்தனைகள் வைத்து தன்னுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
மேலும் அந்த நாளில் குழந்தை வரம் இல்லாதவர்கள் திருமணம் தாமதம் அகுபவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள அவர்களுக்கு முருகன் அருளால் நல்ல வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.
முருகப்பெருமானை வழிபடுவது எவ்வளவு சிறப்போ,அதே சிறப்பு முருகனின் திருப்புகழ் இருக்குறது.இந்த திருப்புகழை சஷ்டி விரதம் நாளில் மட்டும் அல்லாமல் பிற நாட்களிலும் தொடர்ந்து பாராயணம் செய்து வர வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் உருவாகும்.
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாயளித்த
பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில
சமர்வேலெ டுத்த பெருமாளே.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |