சஷ்டி விரதம் முடிந்த பிறகு நாம் அவசியம் பின்பற்ற வேண்டியவை

By Sakthi Raj Nov 08, 2024 08:30 AM GMT
Report

முருக பெருமானின் விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக கந்த சஷ்டி விரதம் கொண்டாடப்படுகிறது.அப்படியாக சஷ்டி விரதம் பக்தர்களால் 6 நாள் அனுஷ்டிக்க பட்டு இன்று ஏழாம் நாள். பலரும் எவ்வாறு சஷ்டி விரதம் முடிக்க வேண்டும்?மேலும் சஷ்டி விரதம் முடித்த பிறகு நாம் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை இருக்கிறது.

ஆனால் பலருக்கும் அது தெரியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.அவ்வாறு செய்யும் பொழுது நாம் கந்த சஷ்டி விரதம் 6 நாள் இருந்த பலன் கிடைக்கமால் போயிவிடும்.நம் இப்பொழுது கந்த சஷ்டி விரதம் முடிந்து 7 ஆம் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்ப்போம்.

முருகப்பெருமான் நேற்றைய தினம் சூரபத்மனை வதம் செய்தார். அந்த காலத்தில் சூரபத்மன் அசுரன் ஆக வளம் வந்தான். கலியுகத்தில் சூரபத்மன் நம்முடைய மனதிலும் நம்முடைய கெட்ட எண்ணத்திலும் தான் குடி கொண்டுள்ளான்.

நம்முள் இருக்கும் சூர பக்தனை அழிப்பதற்காக, நாம் மேற்கொள்ள கூடிய விரதம் இந்த கந்த சஷ்டி விரதம். நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தல் சஷ்டி விரதம் இருந்த 6 நாட்களும் நம்முடைய மனம் முருகனை மட்டுமே எண்ணி தவம் செய்திருக்கும்.

சஷ்டி விரதம் முடிந்த பிறகு நாம் அவசியம் பின்பற்ற வேண்டியவை | Sashti Viratham 7Th Day Worship

தேவை இல்லாத கோபம் கோபம்,பொறாமை, எரிச்சல், பழிவாங்கும் குணம், கெட்ட எண்ணம், எதுவுமே இருந்திருக்காது.இவ்வாறாக முருகப்பெருமான் நம் மனதிற்குள் வந்த உடன் நம் மனதில் சூரபத்மனாக தங்கி இருந்த அத்தனை கெட்ட விஷயங்களும், நம் உடம்பை விட்டும் நம் மனதை விட்டும் வெளியேறி இருக்கும்.

நாம் 6 நாட்கள் இருந்ததை போல் வாழ்க்கையில் முழு நாளும் இருந்தால் பாதி பிரச்சனைகள் வராது.மேலும் சில சஷ்டி விரதம் முடிந்த உடனே அசைவம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சாப்பிட முயல்வார்கள்.இப்படி செய்யும் பொழுது நாம் 6 நாட்கள் மேற்கொண்ட விரதத்திற்கு பலன் அளிக்காமல் போயிவிடும்.

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல்

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல்

6 நாட்கள் விரதம் என்பது பல மாதம் விரதம் இருந்ததற்கு சமம்,ஆக உடனே அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் சிறிது காலம் கழித்து எடுத்து கொள்ளலாம். அதாவது ஒரு இரண்டு, மூன்று நாட்கள் பிறகு தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

மேலும் விரதம் மேற்கொண்டதால் மனசும் வயிறும் சுத்தம் ஆகிருக்கும்ஆகவே உடனடியாக காரமும், சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவுகளையும் உட்கொள்ளும் போது நிச்சயம் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே அசைவம் உடனடியாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சஷ்டி விரதம் முடிந்த பிறகு நாம் அவசியம் பின்பற்ற வேண்டியவை | Sashti Viratham 7Th Day Worship

மேலும் மிக முக்கியமாக நிறைவாக கட்டாயம் இன்றைய நாள் எல்லோரும் முருகன் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக அருகில் இருக்கும் கோயிலுக்கு செல்வது சிறந்த பலனை தரும். முருகன் இன்று புது மாப்பிள்ளை கோலத்தில் காட்சி கொடுப்பார்.

அந்த காட்சியில் அவரை பார்ப்பது கோடி புண்ணியம் தரும். நாளை தினம் சனிக்கிழமை காலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகப்பெருமானுக்கு உங்களுடைய விருந்து சமையல் சமைக்கலாம். சாதம் சாம்பார் பருப்பு வடை பாயசம் ஒரு கூட்டு பொரியல் செய்து வாழை இலையில் அதை பரிமாறி, பூஜை அறையில் முருகனுக்கு படையல் போடலாம்.

நாளை மதியம் 12 மணிக்கு இந்த வழிபாட்டை மேற்கொண்டால், புது மாப்பிள்ளை ஆக இருக்கும் முருகப்பெருமான் தம்பதியோடு உங்கள் வீட்டுக்கு வருகை தந்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்வார் என்பது நம்பிக்கை.

இவ்வாறு படையல் போட்டு வழிபாடு மேற்கொள்ளும் பொழுது வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இடையே பிரியம் உண்டாகி சண்டைகள் இல்லாமல் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US