வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல்

By பிரபா எஸ். ராஜேஷ் Nov 08, 2024 07:00 AM GMT

வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ்வதற்கான ஓர் அறிவியல் திட்டமிடுதல் ஆகும். இதனால் தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமான வாஸ்து வித்தியாசமாக அமைந்துள்ளது. வடநாட்டில் இமயமலை இருக்கும் வட திசை உயர்ந்திருப்பதால் அதனை உத்தரம் என்ற உத்தமம் என்றும் கருதுவர். எனவே வடநாட்டு வீடுகளில் வடக்கு திசை உயர்ந்திருக்க வேண்டும்

மேற்கும் கிழக்கும்

தென்னாட்டில் மேற்கு கடற்கரை ஓரமாக மேற்கு தொடர்ச்சி மலைகள் இருப்பதால் அப்பகுதி உயசர்ந்துள்ளது. எனவே தென்னாட்டு வீடுகளில் மேற்கு திசை உயர்ந்திருக்க வேண்டும். இங்கே ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கி இறங்கி பாய்கின்றன.

இதனால் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் துண்டுபட்டு துண்டுபட்டு காணப்படும். மேற்கு தொடர்ச்சி மலைகள் ஒரே தொடர்ச்சியாக இருக்கும். தக்கான பீடபூமியின் (தென்னிந்தியாவின்) உயரமான பகுதியை நாம் மேற்கு என்ற சொல்லால் குறிக்கின்றோம்.

நிலப்பகுதி மேலே ஏறி இருப்பதால் மேல் திசை என்கின்றோம். கிழக்குப் பகுதி தாழ்வாக இருப்பதால் கீழ்த் திசை என்கின்றோம். செந்தமிழில் குண திசை என்று கிழக்கை அழைத்தனர். குட திசை என்று மேற்கை அழைத்தனர். குடம் என்றால் மேற்கு, குணம் என்றால் கிழக்கு.

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல் | Vastu Shastra Details For New House

மழை தரும் பருவக் காற்றுகள்

தமிழ்நாட்டில் சூரியன் உதிக்கும் திசையைக் கிழக்கு என்கிறோம். சூரியன் மறையும் திசை மேற்கு. கிழக்கு நோக்கி நின்றால் இடது கை பக்கம்.உள்ள திசை வடக்கு, வலது கை பக்கம் உள்ள திசை தெற்கு. தமிழ்நாட்டுக்கு மழை தரக்கூடிய பருவக்காற்றுகள் இரண்டு. ஒன்று தென்மேற்கு பருவக்காற்று, மற்றொன்று வடகிழக்குப் பருவக்காற்று.

தென்மேற்கு பருவக்காற்று தென் மேற்குப்பகுதியில் இருந்து தென்காசி கணவாய் வழியாக குற்றால மலையில் மோதி அங்கிருந்து மேலும் தெற்கு நோக்கி தென்றல் என்ற பெயரில் மதுரையை முத்தமிடும். இத்தகைய தென்றல் காற்று தை, ராசியில் பனிக்காற்று முடிந்ததும் தொடங்கும். வெயில் காலமான பங்குனி, சித்திரை மாதங்களில் தென்றல் காற்று தென்பொதிகை மலையில் இருந்து மதுரையை நோக்கி வீசும்.

வேறு எந்த காற்றுக்கும் தென்றல் என்று பெயர் கிடையாது. தெற்கு பகுதியிலிருந்து வரும் இந்த இந்த காற்றுக்கு மட்டுமே தென்றல் என்று பெயர். ஆனி மாதம் தென்மேற்கு பரூவக்காற்றினால் கேரளாவில் மழை தொடங்கிவிடும். இம் மழை தேனி, கம்பம், தென்காசி கணவாய், பாலக்காட்டுக் கனவாயிலும் பெய்யும்.

இப்பருவக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து இந்தியாவின் வட பகுதி நோக்கி வீசி இமயமலையில் முட்டி வடக்கிலிருந்து கிழக்கு வழியாக திரும்பி தமிழ்நாட்டுக்கு வரும் இதுவே வடகிழக்கு பருவக்காற்று ஆகும்.

இக்காற்று இமயத்தில் மோதித் திரும்பும்போது ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யச் செய்யும். தமிழ்நாட்டுக்கு ஐப்பசியில் அடை மழையும் கார்த்திகையில் கனமழையும் தரும். மழையை கொண்டு வரும்.இக்காற்று கொண்டல் எனப்படும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

தென்றல் சுகம்

ஆனி, ஆடி மாதங்களில் பாலக்காட்டு கணவாய் வழியாக கோவை மாவட்டத்தில் வீசும் மழைக்காற்று ஐப்பசி கார்த்திகையில் மீண்டும் திரும்பி வந்து வடகிழக்குப் பருவ மழையாக பொழியும். இம் மாவட்டத்துக்கு இரண்டு மழை உண்டு. இதனால் அங்கு வாழும் மக்கள் 'தெற்கே வீசும் காற்று திரும்பி வீசாமல் இருக்காது' என்று பழமொழியைப் பதிவு செய்து வைத்துள்ளனர்.

பருவ மாற்றங்களையும் நில அமைப்பையும் நிலத்தின் மேடு பள்ளத்தின் தன்மையையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கான வாஸ்து சாஸ்திரம் அல்லது வீடு கட்டும் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. வடக்கே இருந்து வரும் வாடை காற்றுக்கும் கிழக்கில் இருந்து வீசும் கொண்டல் காற்றுக்கும் நம் வீடுகள் திறந்திருக்க வேண்டும்.

 வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல் | Vastu Shastra Details For New House

வீட்டு மனைத் தேர்வு

வீடு கட்டும் இடத்தை தேர்வு செய்யும் போது பசுமாடு படுத்திருக்கும் இடம், காக்கா பொன் கிடைக்கும் இடம், எறும்புகள் ஊரும் இடம் ஆகியவற்றைத் தேர்வு செய்து அங்கு வீடு கட்டினால் நிலத்தடி தண்ணீர் ஏராளமாக கிடைக்கும். குளிர்ச்சியாக இருக்கும் வீடும் குளிர்ச்சியாக இருக்கும்.

வீட்டின் நான்கு மூலைகளை வரையறை செய்த பின்பு ஒவ்வொரு மூலைக்கு என்று வாஸ்து சாஸ்திரம் வரையறை செய்ததற்கு ஏற்ப வீட்டைக் கட்ட வேண்டும். வடகிழக்கு மூலை ஈசனுக்கு உரியது. அது ஈசான்ய மூலை எனப்படும் வடமேற்கு மூலை சனிபகவானுக்குரியது.

எனவே அதை சனி மூலை என்போம். தென்கிழக்கு மூலை அக்கினி பகவானுக்குரியது. அதனை அக்கினி மூலை என்போம். தென்மேற்கு மூலை கன்னி மூலை எனப்படும். அது கன்னி தெய்வத்திற்குரியது. 

ஈசான்ய மூலை

நான்கு மூலைகளில் கிழக்கில் உள்ள ஈசானிய மூலை இறக்கமாகவும் மேற்கில் உள்ள கன்னி மூலை உயரமாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தென்மேற்கு நிலப்பகுதி உயர்ந்து காணப்படுவதால் நாம் வீடு கட்டும் போதும் அதற்கு எதிராக இயற்கைக்கு மாறாக கட்டிவிடக் கூடாது.

இவ்வாறு ஒருவர் கட்டினால் அடுத்தடுத்த வீடுகளும் சீர் இல்லாமல் போய்விடும். தென்மேற்குப் பகுதியை உயரமாக வைத்துக் தண்ணீர் கிழக்கு நோக்கில் வடியும் வகையில் ஈசானிய மூலையை இறக்கமாக வைக்க வேண்டும். இம்மூலை ஈசனுக்குரிய மூலை என்பதால் சுத்தமாக இருக்க வேண்டும்.

இங்கு பூஜை அறை வைக்கலாம் தூய்மையான தண்ணீர் புழங்கும் வகையில் இப்பகுதி இருக்க வேண்டும். துணி துவைக்கலாம். பாத்திரம் விளக்கலாம். துணி காய போடலாம். நந்தியாவட்டை, பவளமல்லி, செம்பருத்தி, துளசி, திருநீற்றுப்பச்சை, தும்பை போன்ற செடிகளும் இப்பகுதியில் வைக்கலாம். 

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல் | Vastu Shastra Details For New House

அக்கினி மூலை

தென்கிழக்கு பகுதி அக்னி மூலை என்பதால் அந்த மூலையில் அடுப்படி கட்ட வேண்டும். அடுப்படியிலிருந்து வேலைகளைப் பார்த்துவிட்டு பாத்திரங்கள் கொண்டு வந்து கிணற்றடியில் போட்டு விளக்கலாம் அதை சர்வீஸ் ஏரியாவாகப் பயன்படுத்தலாம். கிழக்கு பார்த்த வாசலாக இருந்தால் இப்பகுதியில் கார் வண்டி நிறுத்த போர்டிகோ அமைக்கலாம்.

சனி மூலை

வடமேற்கு மூலை சனி மூலை என்பதால் அங்கு செப்டிக் டேங்க் வைப்பது சாலச்சிறந்தது. ஈசானிய மூலையை அடுத்த படி இடைப்பட்ட பகுதியில் கழிப்பறைகளை கட்டினால் செப்டிக் டேங்க் சனி மூலையில் வைக்க ஏதுவாக இருக்கும். இடைப்பட்ட பகுதியில் படுக்கையறைகள் அமைக்கலாம்

ஆதிசக்தி வரலாறும் வழிபாடும்

ஆதிசக்தி வரலாறும் வழிபாடும்

கன்னி மூலை

கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலை முன்பு ஜேஷ்டா தேவிக்கு உரியதாய் இருந்தது. பின்பு விநாயகருக்கு தரப்பட்டது. எனவே விநாயகரை கன்னி மூலை கணபதியே என்று அழைக்கின்றோம். கன்னி மூலை இறக்கமாக இருந்தாலும் அங்கு செப்டிக் டேங்க் அல்லது நன்னீர் தொட்டி, குடிநீர் தொட்டி (சம்பு) போன்றவை வைத்தாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையாது.

எந்த வீட்டிலும் கன்னிமூலை பாதிக்கப்படக்கூடாது சமதளத்தை விட்டு இறங்கக்கூடாது ஏற்றமாக இருக்க வேண்டும். வயதானவர்கள் கன்னி மூலையில் உள்ள அறையில் தங்கலாம். 

கன்னி முலையில்

நீச்சல் குளம் நடிகை சாவித்திரி உடம்பு இளைப்பதற்காக கன்னி மூலையில் பள்ளம் தோண்டி நீச்சல் குளம் கட்டினார். அதனால்தான் அவர் தன் செல்வத்தை எல்லாம் இழந்தார் வாழ்க்கையையும் இழந்தார். அவரது கணவர் ஜெமினி கணேசன் கன்னி மூலையில் பள்ளம் தோண்டக்கூடாது என்று சாவித்திரியை எச்சரித்தும் கூட சாவித்திரி அதற்கு செவி சாய்க்கவில்லை.

மாறாக சாவித்திரியின் தோழிகள் சாவித்திரி உடம்பு இளைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது என்று ஜெமினி சாவித்திரி மீது பொறாமைப்பட்டு கூறுவதாக சாவித்திரியின் நெஞ்சில் விஷத்தை விதைத்து விட்டனர்.

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல் | Vastu Shastra Details For New House

இறந்தவர் பூமி

கன்னி மூலை கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மூலையாகும். கேரளப் பகுதியில் இம் மூலையை மேற்கா மேடு என்பர் மேற்கே உள்ள மேட்டுப்பகுதியில் அவர்கள் இறந்தவரைப் புதைப்பார்கள். அங்கு மனை நாகம் அந்த வீட்டுக்குரிய பாம்புப் புற்று காணப்படும். இறந்தவர்கள் பாம்பு வடிவில் வருவதாக நம்பிக்கை உண்டு. எனவே மேற்கே உள்ள பகுதி மேட்டுப்பகுதியாக இருக்கும்.

அங்குக் குலத தெய்வத்துக்கு நாக தெய்வத்துக்கு மாலை வேளையில் விளக்கேற்றி வைப்பர். அக்கினி மூலைக்கும் கன்னி மூலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அக்னி மூலை அடுப்படியை ஒட்டி சாப்பாட்டு அறை, ஸ்டோர் ரூம், அதற்கு அடுத்து படிக்கும் அறை, டிவி பார்க்கும் அறை என்று வைத்துக் கொள்ளலாம்.

வாசல் வாஸ்து

வடகிழக்கு பருவக்காற்று நமக்கு மழை தருவதால் தமிழ்நாட்டில் வீட்டின் வாசலை வடக்கு அல்லது கிழக்கே வைப்பது சிறப்பு. தெற்குப் பார்த்து வாசல் வைப்பது விரும்பத்தக்கதல்ல. தெற்கு தென்புலத்தார் திசை. தென்புலம் என்பது இறந்து போன நம் முன்னோர் இருக்கும் திசை ஆகும். தெற்கில் தெரு வாசல் வைத்தாலும் வீட்டின் வாசலை வடக்கு கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.

இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்

இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்

மேற்கு பார்த்து வாசல் வைத்தால் தலைவாசலுக்கு நேராக புறவாசல் ஒன்று கிழக்கு பார்த்து வைக்க வேண்டும். இரு வாசலையும் ஒரே நேரத்தில் திறந்து வைக்க வேண்டும் அதிகாலையில் குடும்பத் தலைவி எழுந்தவுடன் கிழக்கு வாசலை திறந்து வைத்துவிட்டு வந்து மேற்கு பக்கம் இருக்கும் தலை வாசலை திறக்க வேண்டும்.

இரண்டு வாசலும் எப்போதும் திறந்து இருந்தால் மட்டுமே காற்றோட்டம் சிறப்பாக இருக்கும். வீட்டில் குடியிருக்கும் மக்கள் நோய் நொடியின்றி நலமாக வாழ்வார்கள். 

பிரம ஸ்தலம்

வீட்டின் நடுவே முற்றம் வைப்பது அல்லது மேலே கண்ணாடி பதித்து சூரிய ஒளி வீட்டின் நடுப்பகுதியில் வர வைப்பது வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. அதை பிரம்மஸ்தலம் என்கின்றோம். அதாவது வீட்டின் மையப் பகுதிக்கு பகுதியில் மேலே கூரைப் பகுதியைப் பூசாமல் கண்ணாடி பதித்து சூரிய ஒளியை உள்ளே வர வைக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல் | Vastu Shastra Details For New House

சாமி அறையில் படங்கள்

வடகிழக்கு திசையில் உள்ள ஈசானிய மூலையில் சாமி அறை அல்லது சாமி படங்கள் வைக்கும் ஒரு சின்ன அலமாரி (ஷெல்ஃப்) என்று அவரவர். வசதிக்கேற்ப வைக்கலாம். சாமி படங்களைக் கிழக்குப் பார்த்து வைத்து நாம் மேற்கு நோக்கி நின்று வழிபடுவது சிறந்தது.

இறந்தவர் படங்களை வடக்கு நோக்கி வைத்து நாம் தென் திசை நோக்கி நின்று வழிபடுவது சிறப்பு. சாமி படங்களையும் இறந்தவர் படங்களையும் சேர்த்து ஒரே ஷெல்ஃபில் வைக்கக் கூடாது. சாமி படங்களை அறையிலும் அலமாரியிலும் வைத்துவிட்டு இறந்தவர் படங்களை சுவரில் ஆணியடித்து வைக்கலாம். 

விளக்கேற்றும் முறை

மாலையில் ஆறு மணிக்கு கண்டிப்பாக வீட்டில் எல்லா விளக்குகளும் எல்லா அறையிலும் ஏற்றப்பட வேண்டும். அரை மணி நேரமாவது அனைத்து அறைகளிலும் விளக்கு எரிய வேண்டும். முதலில் சாமி அறை விளக்கை எரிய விட்டு, சாமிக்கு விளக்கேற்றிக் கும்பிட வேண்டும்.

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி

சாலைத் தெய்வம் சப்தமாதர் போற்றி

அதன் பின்பு வரிசையாக எல்லா அறையின் விளக்குகளையும் எரிய விட்டு இறுதியாக வாசலுக்கு வந்து வெளி விளக்கை எரிய விட வேண்டும்.இவை அனைத்தும் ஆறு மணியடித்து பத்து பதினைந்து நிமிடத்திற்குள் நடந்து விட வேண்டும். 

விடி விளக்கு

வீட்டின் அறைகளில் விளக்கை அணைக்கும் போது தேவையில்லாத அறையின் விளக்குகளை அரை மணி நேரத்தில் அணைத்து விடலாம். கடைசியாக வாசல் வழக்கை எரியவிட்டது போல தூங்கப் போகும் முன்பு வீட்டினுள் எல்லா அறைகளின் விளக்குகளையும் அணைத்துவிட்டு கடைசியாகச் சமையலறை விளக்கையும் அதற்குப் பின்பு வாசல் விளக்கையும் அணைக்க வேண்டும்.

ஆறு மணியிலிருந்து வீட்டினர் உறங்கப் போகும் வரை எரிந்து கொண்டிருக்க வேண்டும். சாமி அறை, சமையலறை ஆகியவற்றில் விடி விளக்கு இரவு முழுக்க எரிவது நல்லது. சாமி அறையில் எப்போதும் விளக்கு எரிய வேண்டும்.

முன் வாசல் பின்வாசலில் இரவு நேரங்களில் ஜீரோ வாட்ஸ் பல்பு எரிவது மிகவும் நல்லது. காவல் தேவதைகள் யட்சிகள் இரவில் பயணிக்கும் நேரங்களில் விளக்கு எரியும் வீடுகளுக்கு ஆசிகள் வழங்கிச் செல்லும். விளக்கு இல்லா வீடுகள் சரித்திரம் பிடித்த வீடுகளாக மாறிப்போகும். 

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல் | Vastu Shastra Details For New House

 கட்டில் வாஸ்து

படுக்கையறையில் சன்னல் பக்கம் தலை வைத்துப் படுக்க ஏதுவாக கட்டிலைப் போட வேண்டும். வடக்கு அல்லது தெற்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது. கிழக்கு மேற்கு நோக்கி படுக்கும் வகையில் கட்டிலை படுக்கையறையில் போட வேண்டும். சமையலறையில் கிழக்குப் பக்கம் எக்ஸாஸ்ட் ஃபேனும் ஒரு ஜன்னலும் இருக்க வேண்டும்.

வீட்டுப் பெண்கள் சமையல் மேடையை கிழக்கு திசையில் கிழக்கு சுவற்றில் வைத்து கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்லது. பாத்திரம் விளக்கும் சிங்க் எக்காரணம் கொண்டும் சமையலறையின் வடகிழக்கு மூலையில் இருக்கக் கூடாது.

அந்த அறைக்கு அது வடகிழக்கு மூலை அல்லது ஈசான்ய மூலை என்பதால் அந்த மூலையில் ஒரு சாமி படம் மாட்டி வைக்கலாம். ஒரு தீபம் ஏற்றி வைக்கலாம். அந்த மூலையில் பாத்திரம் விளக்கும் 'சிங்க்' வைக்கக் கூடாது. 

 செடி கொடிகள்

வீட்டின் முன்புறம் அல்லது வீட்டின் பின்புறம் அல்லது இரண்டு பக்கங்களிலும் காலியாக கிடக்கும் ஐந்தடி இடத்தில் ஓமவல்லி, துளசி தும்பை, தூதுவளை, திருநீற்றுப் பச்சிலை, போன்ற மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். கருவேப்பிலை, கொத்தமல்லி,புதினா போன்றவற்றையும் வளர்க்கலாம். கூடுதலாக இடமிருந்தால் வாசல் பகுதியில் சந்தனமல்லி, பவளமல்லி போன்ற செடிகளை வைப்பது மாலை வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு நல்ல வாசனை வீசும்.

ஜொலிக்கும் நட்சத்திரப் பட்டியல்

ஜொலிக்கும் நட்சத்திரப் பட்டியல்

சாமிக்குரிய பூக்கள்

பெண் தெய்வங்களுக்கு வாசனையுள்ள மலர்களைப் பறித்து தினமும் வைக்கலாம். விநாயகருக்கு செம்பருத்தி சிவனுக்கு தும்பை பார்வதிக்கு வெண்மை நிற வாசனை மலர்கள் பெருமாளுக்கு துளசி என்று தினமும் இரண்டு இலை அல்லது பூவை பறித்து ஐந்தேமுக்கால் ஆறு மணிக்கு சாமிக்கு வைத்து பின்பு ஐந்து முக விளக்கேற்றி வைத்து அரை மணி நேரம் எரிய விட வேண்டும்.

விளக்கேற்றியதும் ஒவ்வொரு சாமிக்கும் ஒரு பாட்டு சொல்லி வணங்க வேண்டும். இதற்கு ஒரு கால் மணி நேரம் ஆகலாம். ஆனால் தினமும் இந்த பிரார்த்தனையை கடவுள் வழிபாட்டை வீட்டுப் பெண்கள் செய்ய வேண்டும்.

குழந்தைகளை அந்நேரம் அருகில் வைத்துக் கொண்டு அவர்களையும் சாமி பாட்டு சொல்ல வைக்க வேண்டும். குழந்தைகளிடம் ஒரு கூடையை கொடுத்து பூ, இலை பறித்து கொண்டு வரச் சொல்லி அந்தந்த சாமிக்கு வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்

சூரியபகவான் வழிபாடும் அதன் சிறப்புகளும்

சூரியபகவான் வழிபாடும் அதன் சிறப்புகளும்

வாஸ்துவின் நுண் அறிவியல்

வாஸ்து முறைப்படி எல்லோரும் வீடு கட்ட வேண்டும். ஒருவர் ஈசான்ய மூலையை சுத்தமாக வைத்திருப்பார். இந்த ஈசானிய மூலைக்கு அருகில் அடுத்த வீட்டுக்காரர் தன் வீட்டின் செப்டிக் டேங்க் வைத்தால் இரண்டு வீட்டினருக்கும் ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.

ஒரு வீட்டில் ஈசானிய மூலை சுத்தமாக இருக்கும் போது அதற்கு அடுத்த வீட்டில் இந்த ஈசானிய மூலையை ஒட்டி அடுப்படி வரவேண்டும். இந்த அமைப்பு எல்லா வீடுகளும் ஓர் ஒழுங்கு முறையில் க அமையு உதவும். ஒரு வீட்டுக்கும் மறு வீட்டுக்கும் இடையே எவ்வித குளறுபடியும் இருக்காது.

இவ்வாறு அடுத்தடுத்த வீடுகள் இருந்தால் அந்த வீடுகளில் வாழும் மக்கள் சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் வாழ்வது உறுதி.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US