இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்
இந்து சமயத்தின் முக்கிய நூலாக இராமாயணம் கருதப்படுகிறது.இந்த இராமாயணத்தில் நாம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளது.இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் கருத்துக்களை சொல்லுவது போல் அமைந்து இருக்கிறது.
கண்டிப்பாக இராமாயணத்தில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தையும் நாம் தவிர்க்க முடியாத அளவு வாழ்க்கையோடு ஒன்றி அமைய பெற்று இருப்பது இதனுடைய சிறப்பு.அப்படியாக இப்பொழுது இராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.
வசிஷ்டர்-தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.
ராமன்- ராமாயணத்தின் கதாநாயகன்,பெருமாள் எடுத்த தசா அவதாரங்களில் மனிதனாக வாழ்ந்தவர்.
சீதா-ராமனின் மனைவி. ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு.
ராவணன்-விச்ரவா என்பவரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.
லட்சுமணன்-ராமபிரானின் தம்பி. சுமித்திரையின் மூத்த மகன்.தன்னுடைய அண்ணனுக்கு பணிசெய்வதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவன்.
தசரதர்-ராமனின் தந்தை.
அகல்யை-நீண்ட காலமாக கல்லாக இருந்து பிறகு ராமரின் காலடி பட்டு சாபம் நீங்கப்பெற்றவள்.
அங்கதன்- வாலி - தாரையின் மகன்.கிஷ்கிந்தையின் இளவரசன்
இந்திரஜித்- ராவணனின் மகன்.ராமனின் தம்பி லட்சுமணனால் அழிந்தவன்.
கரன் மற்றும் தூஷணன்-ராவணனின் தம்பிகள்,இவர்கள் ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.
கபந்தன்- தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன்.பிறகு கந்தர்வ வடிவம் பெற்று ராமன் லட்சுமணர்கள் இருவருக்கும் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்.
குகன்-வேடர்களின் தலைவன்.இவன் ஒரு படகோட்டி, ராமரால் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன்.
கும்பகர்ணன்-ராவணனின் தம்பி, ஆறு மாதங்கள் சாப்பிட்டும், மீதமுள்ள ஆறு மாதங்கள் பெரும் உறங்கியும் நாட்களை கழிப்பவன்.
கவுசல்யா, கைகேயி, சுமித்திரை- தசரதரின் பட்டத்தரசிகள்.
சுநைனா- ஜனகரின் மனைவி, சீதையின் தாய்.
கவுதமர்- கல்லாக சம்பம் பெற்ற அகல்யையின் கணவர், முனிவர்
சதானந்தர்- அகல்யை,கவுதமரின் மகன்.சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.
சம்பராசுரன்- இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் ராமனின் தந்தை தசரதர் தேவர்களுக்கு உதவி வெற்றி பெற செய்தார்.
சபரி- மதங்க முனிவரின் மாணவி,நீண்ட நாள் காத்திருந்து ராமனை தரிசித்தவள்.
சதபலி- ஶ்ரீராம தூதனாக ஹனுமன் தென் திசையில் தாயாரை தேட செல்ல அதே தூதனாக இவர் வடதிசையில் சீதையை தேடச்சென்றவன்.
சம்பாதி- கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், ஹனுமன் உட்பட்ட பலரும் சீதா தேவியை எப்படி தேட என விவாதித்த போது இவர்தான் சீதா தேவி எங்கு இருக்கிறார்?எப்படி செல்ல வேண்டும் என கூறி அங்கதனின் தலைமையிலான வானர படைக்கு உதவியவர்.
சுமந்திரர்- தசரதரின் மந்திரி, தேரோட்டி.
சுக்ரீவன்- கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியன் அருளால் பிறந்தவன்.
சுஷேணன்- வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச் சென்றவன்.
சூர்ப்பணகை- ராவணனின் விபிஷணன் கும்பகர்ணன் ஆகியோரின் தங்கை.
தாடகை- காட்டில் வசித்த அரக்கி, ராமனால் அழிந்தவள்.
தாரை- வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.
திரிசடை- அசோகவனத்தில் இருந்த அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.தாயார் சீதைக்கு ஶ்ரீராமன் உங்களை மீட்டு போக வருவார் என நம்பிக்கையை தினமும் ஊட்டியவள்.
நளன்- பொறியியல் அறிந்த வானரவீரன், விஸ்வகர்மாவின் மகன், இராம இராவண யுத்தத்துக்கு கடலின்மீது இலங்கைக்கு இவன் மேற்பார்வையிலேயே சேதுபாலம் கட்டபட்டது.
நீலன்- வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன். இராமாயண சேதுபாலம் அமைய நளனுடன் துனைபுரிந்தவன்.
பரதன்- கைகேயியின் மகன், ராமனின் தம்பி.
மந்தரை- கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி.இவளை கூனி என்றும் அழைப்பர். இராமாயண காவியத்தில் ஶ்ரீராமர் பட்டத்தை துறந்து கானகம் செல்லவும் அதன் மூலம் இராமாயண வைபவம் நடக்கவும் முக்கிய காரணமானவள்.அத்தோடு தசரதன் மறைவுக்கும் காரணமானவள்.
மண்டோதரி- தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
மாரீசன், சுபாகு- இராமாயணத்தில் இராமனால் அழிக்கப்பட்ட பெண் அரக்கியான தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.
ருமை- சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.
லங்காதேவி- இலங்கையின் காவல் தெய்வம்.இவளை மீறி எதிரிகள் யாருமே இலங்கைக்குள் நுழைய முடியாது ஹனுமன் கூட பெண்ணான இவளை ஜெயித்த பின்பே இலங்கைக்குள் நுழைய முடிந்தது.
சமுத்திரராஜன்- கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்.
வால்மீகி- ராமாயணத்தை எழுதியவர்.
வாலி- இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன். இறக்கும் தருவாயில் கூட ஶ்ரீராம நாமத்தை உச்சரித்தபடியே உயிர் துறந்து வைகுந்தம் ஏகினான்.
விஸ்வாமித்ரர்- ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர்.மேலும் சீதாக்கும் ஶ்ரீராமன் திருமணத்திற்கு முக்கிய காரணமானவர்.
விபீஷணன்- ராவணனின் தம்பி, தூதனாக வந்த ஹனுமனை கொல்வது தவறு என சபையில் உறைத்தவன். சீதாதேவியை மீண்டும் ஶ்ரீராமரிடமே தந்துவிட யோசனை சொன்னவன். ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.மேலும்,இன்றய பூலோக வைகுண்டமாக நாம் போற்றும் ஶ்ரீரங்கம் உருவாக காரணமானவன்.
ஜடாயு- கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், முதன் முதலில் சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்இழந்தவன்.ஆனால் இறக்கும் முன் இராவணனை பற்றிய விபரம் கூறியவர்.
ஜனகர்-ஶ்ரீராமருக்கும் அவரின் நிழலான லட்சுமணுக்கும் மாமனாரானவர். சீதை, ஊர்மிளாவின் தந்தை.
ஜாம்பவான்- கரடி வேந்தர்,இவர் தான் அனுமனின் பிறப்பின் ரகசியத்தை உணர்த்தியவர்.பிரம்மா அருள்பெற்று பிறந்தவர்.
அனுமான்- அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவர். ராமபிரானின் தீவிர பக்தர்.
கம்பர்-இவர்சோழநாட்டு கவிஞன்.வடமொழிக்கு எப்படி ஶ்ரீவால்மீகி எழுதிய இராமாயணம் மூலமோ அதுபோல் தமிழில் இராமாயண காவியத்தை எழுதியவர், இவர் எழுதிய அந்த இராமாயணத்தைத்தான் கம்ப ராமாயணம் என்று இன்றும் தமிழர்கள் போற்றுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |