யார் எல்லாம் துளசி மாலை அணியலாம்?அணியக்கூடாது?
இந்து மதத்தில் துளசி என்பது மிக புனிதமாக கருதப்படும் விஷயம் ஆகும். பகவான் விஷ்ணுக்கு துளசி இல்லாமல் செய்யப்படும் பூஜை நிறைவு பெறாது என்பது ஐதீகம்.
மேலும் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் துளசி செடி கட்டாயமாக இருக்கும்.அதற்கு தினமும் தண்ணீர் விட்டு சிலர் தினமும் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றுவதும் உண்டு.
அவ்வளவு புனிதமான துளசிக்கு இணையானது தான் இந்த துளசி மாலை. இந்தியா மட்டும் அல்லாமல் பல நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் இந்த துளசி மாலை அணிந்து இருக்கின்றனர்.
மேலும் யார் இந்த துளசி மாலை அணிகிறார்களோ அவர்கள் பகவன் விஷ்ணுவால் எப்பொழுதும் காப்பாற்ற படுகிறார் என்று நம்பப்படுகிறது.
இந்த துளசி மாலையை தொடர்ந்து அணிபவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நம்பிக்கை. சிலர் இந்த துளசி மாலையை எப்பொழுதும் கழுத்தில் அணிந்து கொள்வார்கள் சிலர் மந்திர ஜபம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்துவார்கள்.
அப்படியாக இன்னும் சில இடங்களில் துளசி மாலையை எல்லோரும் அணிவிக்க கூடாது என்று கருத்துக்கள் பரவி உள்ளது.
இப்பொழுது இந்த துளசி மாலையின் மகிமையையும் யார் இந்த துளசி மாலை அணியலாம்?யார் அணியக்கூடாது?இந்த துளசி மாலை அணியும் முன் அணிந்த பின் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளவோம்.
துளசி மாலை அணியும் முறை
இந்த துளசி மாலையானது துளசி செடியின் அடி பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்து செய்யக் கூடிய மாலை ஆகும்.ஒருவர் துளசி மாலை வாங்கி அணிவிக்க வேண்டும் என்று நினைத்தால் மாலை வாங்கிய உடன் முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊறவைக்கவேண்டும்.
சுமார் இரண்டு மணி நேரம் ஆவது மாலை அந்த மஞ்சள் தண்ணீரில் உறவைக்கவேண்டும்.அதன் பின் சாதாரண தண்ணீரில் நன்றாக சுத்தமாக அலசிய பின் வீட்டில் உள்ள பெருமாள் மற்றும் மஹாலக்ஷ்மி தாயார் படத்திற்கு முன் பூஜை செய்து அதன் பின் நாம் அணைந்து கொள்ளலாம்.
துளசி மாலையின் விதிமுறைகள்
இந்த துளசி மாலையை யார் வேண்டுமாலும் அணிவிக்கலாம்.ஆனால் துளசி மாலை அணிந்தால் சில விதிமுறைகள் இருக்கிறது.அதாவது யார் துளசி மாலை அணிகிறார்களோ அவர்கள் பூண்டு,வெங்காயம்,இறைச்சி போன்ற உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலும் இந்த துளசி மாலையை தீவிரமான விஷ்ணு பக்தர் தான் அணிவிப்பார்கள்.ஆக அவர்கள் துளசி மாலை அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து அணியத்தொடங்கி விட்டால் பிறகு அதை அனாவசியமாக கழட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.
மேலும் இப்பொழுது நிறைய போலி துளசி மாலை கடைகளில் விற்க தொடங்கி விட்டது.ஆதலால் நாம் வாங்கி இருப்பது சரியான துளசி மாலை தான என்று அறிந்து கொள்ள துளசி மாலையை சுமார் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
அப்பொழுது மாலையின் நிறம் மாறவில்லை மங்கவில்லை என்றால் வாங்கி இருப்பது உண்மையான துளசி மாலை ஆகும்.பிறகு நாம் அதை முறைப்படி அணிந்து கொள்ளலாம்.
துளசி மாலை அணிவதின் நன்மைகள்
பொதுவாக இந்த துளசி என்றாலே பல மருத்துவ குணங்களை கொண்டது.அதே போல் இந்த துளசி மாலையை அணிவதின் வழியாக பல மருத்துவ குணங்கள் நன்மைகள் உருவாகிறது என்று சொல்லப்படுகிறது.மேலும் நம்முடைய உடலில் காணப்படும் ஆற்றல் மையங்கள் பொதுவாக சக்கரங்கள் என அழைக்கப்படுகிறது.
உடல் முழுவதும் ஆற்றல் சீராக பரவுவதை உறுதி செய்ய துளசி மாலை உதவுகிறது. அதன் படி, துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொள்வதும் மூலம் சக்கரங்கள் சமநிலையை அடைகின்றன.அடுத்தபடியாக இந்த துளசியின் மணம் மற்றும் ஆன்மீக உட்பொருள்கள் போன்றவை சக்கரங்களை நேர்ப்படுத்தி, அறிவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
ஒருவர் துளசி மாலை அணிவித்து தியானம் செய்யும் பொழுது அவர்களுடைய மனம் தெளிவடைகிறது.அதாவது துளசியின் நறுமணம் தெய்விக ஆற்றல் உடையது.ஆக தியானம் மேற்கொள்ளும் பொழுது அந்த தெய்விக சக்தியானது நம்முடைய சிந்தனையை தெளிவு படுத்தி மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது.
எவர் ஒருவர் இந்த துளசி மாலையை அணிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆன்மீக சிந்தனை மேலோங்குகிறது.அவர்கள் ஆன்மீக பயணத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இந்த துளசி மாலை மிகவும் உதவியாக இருக்கிறது. பொதுவாக இந்துக்களில் துளசி மாலை அணிவதை ஒரு பாதுகாப்பாக கருதுகின்றனர்.
அதாவது துளசி மாலை அணிவதால் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள்,துர்சக்திகள் போன்ற தீய எண்ண அலைகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று சொல்லப்படுகிறது.சமீபத்திய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்பது ஒரு மிகப்பெரிய வியாதியாக உள்ளது.
ஆக ஒருவர் துளசி மாலை அணிவிப்பதால் அந்த மனம் ஆனது நம்முடைய தேவை இல்லாத சிந்தனைகளில் இருந்து நம்மை ஒருநிலை படுத்தி மனஅழுத்த பாதிப்புகளில் இருந்து காப்பாற்றுகிறது.மேலும் இந்த துளசிக்கு நம் உடல்களில் ஏற்படும் பாக்டீரியா வைரஸ் போன்ற நோய் தோற்று கிருமிகளின் இருந்து பாதுகாப்பாக வைக்கிறது.
ஏன் என்றால் இந்த துளசிக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளது.அடுத்தபடியாக பெரும்பாலான மக்கள் தூக்கமின்மை காரணத்தால் மிகவும் அவதி படுகின்றனர்.அவர்கள் துளசி மாலையை தூங்க செல்லும் முன் அணிந்து கொள்வது அல்லது தலையணை அடியில் வைத்து உறங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கம் வருவதை பார்க்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |