சைவம் போற்றும் 63 நாயன்மார்கள்
தமிழகத்தில் பௌத்தமும் சமனமும் வெளியேற்றப்பட்டு சைவ சமயம் பேரெழுச்சி பெற்ற காலத்தில் அனைத்து சாதியினரையும் சேர்ந்த சிவத் தொண்டர்கள் சமுதாயத்தில் பெருமதிப்புப் பெற்றனர். சேர நாட்டில் இவ்வெழுச்சியின் தாக்கம் பெரியளவில் இல்லை.
சோழ நாட்டில் அரசர்களின் ஆதரவுடன் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தம் அச்செல்வாக்கை இழந்தது. பௌத்தர்களின் 'கந்துடைப் பொது வில்களாக' இருந்த 'இந்திரன் கோட்டங்கள் சிவன் கோயில்கள் ஆயின.
சமய வாதம் நடந்த போது தோற்றுப்போன பௌத்தர்களின் நாக்குகள் வெட்டப்பட்டன. பௌத்தர்கள் கிழ்க்காசிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இங்கு சிவ பக்தி பெருகியது. அதிக எண்ணிக்கையில் நாயன்மார்கள் தோன்றினர்.
பாண்டிய நாட்டிலும் அனல் வாதம், புனல் வாதம் மூலமாக எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட பின்பு உயிருக்குப் பயந்து பல சமணர்கள் சைவத்துக்கு மதம் மாறினர். கூன் பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்க்க திருஞான சம்பந்தர் திருநீறு கொடுத்து
மந்திரமாவது நீறு/
வானவர் மேலது நீறு/
சுந்தரமாவது நீறு/
துதிக்கப்படுவது நீறு/
தந்திரமாவது நீறு/
சமயத்தில் உள்ளது நீறு/
செந்துவர் வாயுமை பங்கன்/ . திருஆலவாயான் திருநீறே/
என்று தொடங்கித் திருநீற்று பதிகம் பாடினார். நோய் தீர்ந்து நலம்பெற்று நின்ற சீர் நெடுமாறனான மன்னன் சைவத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. இதனாலும் பாண்டிய நாட்டில் சைவத் தொண்டர்கள் பெருகினர். இங்கு சைவம் அரசனின் ஆதரவு பெற்ற சமயமாக விளங்கியது.
சைவ சமயம் மக்களின் சமயம் என்பதை உணர்த்தும் வகையில் அனைத்து சாதியினருக்கும் நாயன்மார் பட்டியலில் இடம் கிடைத்தது. எனினும் அந்தணர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
சிவபெருமானுக்காகவும் சிவனடியார்களுக்காகவும் செயற்கரிய செய்த தொண்டர்கள் நாயன்மார் பட்டியலில் இடம்பெற்றன. இது சாதிபேதம் பார்க்கவில்லை. சிவபக்தியே முக்கிய இடம் பெற்றது.
63 நாயன்மார்கள் பற்றிய முதல் பட்டியல் திருத்தொண்ட தொகையில் உள்ளது. அடுத்ததாக 12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் இவர்களின் வரலாற்றை செய்யுள் வடிவில் எடுத்த இயம்புகின்றது.
சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள்
பரதவரான அதிபத்தர்,
சான்றோர் பிரிவை சேர்ந்த ஏனாதிநாதர்,
செங்குந்தர் பிரிவை சேர்ந்த கணமுல்லர்,
மாமாத்திரர் என்ற பிரிவைச் சேர்ந்த சிறுத்தொண்டர்,
புலையர் இனத்தைச் சேர்ந்த திருநாளைப் போவார்,
குயவரான திருநீலகண்டர்,
ஆதி சைவர் பிரிவைச் சேர்ந்த புகழ்த்துணை நாயனார்,
குறும்பர் இனத்தைச் சேர்ந்த பெருநிழலை குறும்பர் நாயன்மார்களாகப் போற்றப்பட்டனர்.
அந்தணர்கள் அதிகம் ஏன்?
அந்தணரான அப்பூதி அடிகள்,
ருத்ர பசுபதி நாயனார்,
எறிபத்த நாயனார்,
கனநாதர்,
குங்கிலிய கலையனார்,
திருஞானசம்பந்தமூர்த்தி,
திருநீல நக்க நாயனார்,
நமி நந்தி,
முருக நாயனார்,
சண்டேஸ்வர நாயனார்,
சிறப்புலி நாயனார்,
சோமசி மாறர் ஆகியோர் நாயன்மார்களாக சிறப்பு பெற்றனர்.
மற்ற பிரிவினரை விட இப்பிரிவினர் சைவத்தை தழுவியதற்கு முக்கிய காரணம் இவர்கள் காலத்துக்கு முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்த சமண சமயங்கள் ஆரியப் பார்ப்பனருக்கு எதிராக செயல்பட்டன.
அவை ஆரம்பத்தில் கடவுள் மறுப்பு சமயங்களாக இருந்தன. யாகம், வேள்வி, பூஜை ஆகியவற்றை எதிர்த்தன. எனவே அந்தணர்கள் அச்சமயங்களை ஒன்றுகூடி எதிர்த்து நாட்டை விட்டு அப்புறப்படுத்தினர்.
அந்தணரல்லாத நாயன்மார்கள்
வணிகரான
அமர் நீதி நாயனார்,
இயற்பகை நாயனார்,
காரைக்கால் அம்மையார் நாயன்மார்கள் என சிறப்பிக்கப்பட்டனர்.
வேளாளர்களான
அரிபட்டாயர்,
இளையான்குடி மாறனார் கோட்புலி நாயனார்,
சாக்கியர், முனையடுவார் நாயனார்,
மூர்க்க நாயனார்,
மான கஞ்சார நாயனார்,
செருத்துனை நாயனார்,
சக்தி நாயனார் ஆகியோரும் நாயன்மார்கள் என்று சிறப்புத் தகுதியைப் பெற்றனர்.
அரச குடும்பத்தில் தோன்றிய
கோச்செங்கட் சோழன்,
புகழ்ச்சோழன்,
மங்கையர்க்கரசியார் ஆகியோர் சைவ சமயத்தை ஆதரித்ததால் மக்களும் சைவர்களாக மாறினர்.
பாண்டிய நாட்டு நாயன்மார்
பாண்டிய நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த
குலச் சிறையார்,
கூற்றுவர்,
களப்பாளர்,
மங்கையர்க்கரசியார்,
வணிகரான மூர்த்தி நாயனார் ஆகியோர் நாயன்மார் தகுதி பெற்றனர்.
தொண்டை நாட்டினர்
தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் குறுநில மன்னரான
அயடிகள் காடவர் கோன்,
கழற்சிங்கர்,
வேடர் இனத்தைச் சேர்ந்த கண்ணப்பர்,
செக்கார் பிரிவை சேர்ந்த கலியநாயனார்,,
ஏகாலி வகுப்பினை சேர்ந்த திருக்குறிப்புத் தொண்டர்,
அந்தணரான பூசலார் ஆகியோர் நாயன்மார்கள் பட்டியயலில் இடம்பெற்றனர்.
மற்ற நாட்டு நாயன்மார்
நடுநாட்டைச் சேர்ந்தவர்களான
ஆதிசைவர் இசைஞானியார்,
சடைய நாயனார்,
சுந்தரமூர்த்தி நாயனாரும்
மலை நாட்டைச் சேர்ந்த இடையரான ஆணாய நாயனார் அரசன் களரிவார் களறிற்றிவார்,
விரல் மிண்ட நாயனார் ஆகியோரும்
வட நாட்டைச் சேர்ந்த இடையர் திருமூலரும்
குடகு பகுதியை சேர்ந்த சாலியர் நேச நாயனாரும் நாயன்மார்கள் ஆகினர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |