வீடுகளில் காகம் கத்தினால் விருந்தினர் வருவார்களா? சாஸ்திரம் சொல்வதென்ன?
பொதுவாக, நம்முடைய சாஸ்திரங்களில் வீடுகளில் காகம் கத்தினால் அன்றைய தினம் நம்முடைய வீட்டிற்கு எதிர்பாராத விருந்தினர்கள் வருவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்படியாக காகம் வீடுகளில் கத்தினால் அவை நன்மையா? தீமையா என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் காகம் கூரைமேல் அமர்ந்து கரைந்தால் நம்முடைய வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதின் அறிகுறியாகும். அதேபோல் வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து கரைந்தால் நமக்கு வேலையில் முன்னேற்றமும் நல்ல பண வரவும் கிடைக்கும் என்பதின் அறிகுறியாகும்.
நம்முடைய இந்து மதத்தில் காகம் என்பது எமதர்மராஜாவின் தூதராகவும் சனிபகவானுடைய வாகனமாகவும் கருதப்படுகிறது. ஆதலால் காகம் வீட்டிற்குள் வந்து அமர்ந்தால் நமக்கு வர இருக்க கூடிய ஆபத்து விலகி விட்டது என்பதை அவை குறிக்கிறது.

மேலும், காகத்திற்கு சாதம் அல்லது இனிப்பு வைத்தால் முன்னோர்களின் முழு ஆசியை நாம் பெறலாம். நம் வீடுகளை சூழ்ந்த தீய சக்திகள் விலகும். இருப்பினும் காகம் மொட்டை மாடியில் தெற்கு திசையை நோக்கி அமர்ந்து தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தால் அவை அபசகுனமாக பார்க்கப்படுகிறது.
இவை நம் வீடுகளில் நடக்க உள்ள தீய விளைவுகளின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. அதேபோல், பறக்கும் காகம் திடீரென தலையில் பட்டால் அந்த நபருக்கு வரக்கூடிய நெருக்கடியை அவை உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |