தேய்பிறை சஷ்டி அன்று நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்
பொதுவாக முருகப்பெருமானுக்கு சஷ்டி திதி உகந்த திதியாக சொல்லப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் திருமண தாமதம் இருப்பவர்கள் பொதுவாக சஷ்டி அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பார்கள்.
மேலும் ஒருவர் தேய்பிறை சஷ்டி அன்று விரதம் இருக்கும் பொழுது தங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்றும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்தால் செல்வங்கள் உயரும் என்றும் கூறப்படுகிறது. இப்பொழுது தேய்பிறை சஷ்டி அன்று நாம் செய்ய கூடாத செயல்களை பற்றி பார்ப்போம்.
இந்த சஷ்டி திதி அன்று நாம் சில செயல்களை செய்தால் நமக்கு கஷ்டங்கள் ஏற்படும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் அசைவம் சமைக்கக்கூடாது.
அடுத்ததாக யாரிடமிருந்தும் எந்தவித பொருளையும் கடனாக வாங்காதீர்கள். அது பணமாக இருந்தாலும் நகையாக இருந்தாலும் எந்த பொருளாக இருந்தாலும் சரி யாரிடம் இருந்தும் திருப்பித் தருகிறேன் என்று கூறி அதை கடன் வாங்க கூடாது.
அதை போல் அவசர தேவைக்கு நகை வங்கியில் வைத்து பணம் பெற வேண்டும் என்று நினைத்தாலும் இந்த நாளில் செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் தங்கத்தை வியாழன் அன்று அடமானம் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் தங்கம் குருவின் அம்சமாக திகழ்கிறது.அதோடு சேர்த்து இந்த சஷ்டி திதியும் வருவதால் அன்றைய தினத்தில் நாம் தங்கத்தை அடமானம் வைத்தோம் என்றால் அதை நம்மால் திருப்ப முடியாத சூழ்நிலை உண்டாகலாம்.
கடன் வாங்கினோம் என்றால் அந்த கடனை அடைக்க முடியாத நிலை உண்டாகலாம்.
குரு பகவான் குபேரர் முருகர் என்று மூவருக்கும் உகந்த தினமான வியாழக்கிழமை சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி சின்ன சின்ன விஷயங்கள் செய்வதை தவிர்த்தால் வாழ்க்கையில் நல்ல பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |