நினைத்த காரியம் நிறைவேற சனிக்கிழமை செய்யவேண்டிய 3 பரிகாரங்கள்

By Sakthi Raj Mar 22, 2025 05:45 AM GMT
Report

இந்து மதத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. வீடுகளில் எப்பேர்ப்பட்ட சிக்கல் இருந்தாலும் அதை சில பரிகாரம் வழியாக சரி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

அப்படியாக, வீடுகளில் வாஸ்து குறைபாடுகள் இருப்பவர்கள் மற்றும் வாழ்க்கையில் நினைத்தது காரியம் நடப்பதற்கு கால தாமதம் ஆகிறது என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் ஒரு 3 பரிகாரம் செய்தால் நல்ல நிவர்த்தி கிடைக்கும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது மங்களகரமான விஷயம் ஆகும். அந்த வகையில், சனிக்கிழமையில் இந்த 3 இடங்களில் விளக்கேற்றினால், நம்முடைய விருப்பம் நிறைவேறும். அது மட்டும் அல்லாமல் அவர்கள், வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்கும்.

நினைத்த காரியம் நிறைவேற சனிக்கிழமை செய்யவேண்டிய 3 பரிகாரங்கள் | Saturday Parigarangal For Success

1. இந்து மத சாஸ்திரப்படி சனிக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சனிபகவான் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் கடுகு எண்ணெயில் விளக்கு ஏற்றுவது மிக சிறந்த மாற்றத்தை கொடுக்கும். நமக்கு இருக்கும் தீய விளைவுகளை நெருங்க விடாமல் தடுக்கும்.

2. நம்முடைய சாஸ்திரத்தில் சனிக்கிழமை அன்று வீட்டின் பிரதான நுழைவாயிலின் இடது பக்கத்தில் ஒரு விளக்கை ஏற்றுவது வீட்டிற்குள் வரும் எதிர்மறை ஆற்றலை தடுக்கிறது.

இவ்வாறு செய்யும் பொழுது லட்சுமி தேவியின் அருள் கிடைத்து வீட்டில் உள்ள பொருளாதார சிக்கல் விலகி, செல்வ செழிப்பு உண்டாகும்.

5000 ஆண்டு பழமையான வள்ளியூர் முருகன் மலைக் கோவில்

5000 ஆண்டு பழமையான வள்ளியூர் முருகன் மலைக் கோவில்

3. சனிக்கிழமை என்பது பெருமாள் வழிபாட்டிற்கு உரியது. பெருமாளின் முக்கிய அவதாரமான ராமர் உடன் எப்பொழுதும் இருப்பவர் ஹனுமன். ஹனுமன் வெற்றி, வீரம், வலிமைக்கு சொந்தக்காரர்.

ஆக, சனிக்கிழமை அன்று ஹனுமன் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நமக்கு மன வலிமை கொடுத்து செய்யும் காரியங்களில் வெற்றியை தருகிறது.

4. அதே போல் நம்முடைய இந்து மதத்தில் அரசமரம் என்பது தெய்வத்திற்கு இணையாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் அரசமரத்தடியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது புனிதமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய விருப்பங்கள் நிறைவேறி வெற்றிகள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US