2027 சனி பெயர்ச்சி: இந்த 2 ராசிகளுக்கு அஷ்டம சனி, கண்டக சனி தொடங்குகிறது
ஜோதிட கணக்கின்படி 2027 ஜூன் மூன்றாம் தேதி அன்று சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழைகிறார். அங்கு அவர் 2027 அக்டோபர் 20 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பிறகு வக்ர நிலையில் மீண்டும் மீன ராசிக்கு திரும்புகிறார். 2027 ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ரம் அடைய இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டங்களில் மேஷத்தில் சில மாதங்கள் மட்டுமே இருந்து பிறகு வக்ர பெயர்ச்சியால் மீண்டும் மீனம் வருகிறார். இந்த இரண்டு ராசிகளுக்கும் அந்த காலகட்டங்களில் ஒரு தற்காலிகமான நிம்மதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த பெயர்ச்சியால் இரண்டு ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம், அவர்கள் யார் என்று பார்ப்போம்.

கன்னி:
சனிபகவான் மேஷத்தின் ராசிக்குள் நுழைந்த உடனே கன்னி ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியன் தாக்கம் துவங்கும். காரணம் கன்னி ராசியிலிருந்து மேஷம் எட்டாவது வீடாக இருக்கிறது.
இந்த நேரத்தில் வேலையில் தடை, தாமதம் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கலாம். ஆகவே, இவர்கள் இந்த காலகட்டங்களில் முடிவு எடுக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்று ஜோதிட கணிப்புகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கும் இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இவர்களுக்கு மகர ராசியில் இருந்து மேஷம் நான்காவது வீடாகும். அதனால் இவர்களுக்கு கண்டக சனி துவங்குகிறது.
வீடு, குடும்பம், சொத்து மற்றும் வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் இவர்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தில் இவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணி சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
2027 முதல் 2030 வரை சனியின் முக்கிய ராசி மாற்றங்கள்
2027 ஜூன் 3 - மேஷ ராசிக்கு பயணிக்கிறார்,
2027 அக்டோபர் 20 - வக்ர நிலையில் மீண்டும் மீன ராசிக்குத் திரும்புகிறார்.
2028 பிப்ரவரி 23 - மீண்டும் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.
2029 ஆகஸ்ட் 8 - ரிஷப ராசிக்கு பயணிப்பார்.
2029 அக்டோபர் 5 - வக்ர நிலையில் மேஷத்திற்குத் திரும்புதல்.
2030 ஏப்ரல் 17 - மீண்டும் ரிஷப ராசிக்குள் நுழைதல்.
சனி தசை என்றால் என்ன?
பொதுவாக, சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து நான்காவது அல்லது எட்டாவது வீட்டில் சனி அமர்ந்திருக்கின்ற பொழுது அந்த காலம் அவர்களுக்கு சனி திசை எனப்படும்.
அதுவே, நான்காம் வீட்டில் இருந்தால் கண்டக சனி, எட்டாம் வீட்டில் இருந்தால் அஷ்டமி சனி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆதலால், சனி அமர்வு பொதுவாகவே கெட்ட பலன்களை தான் கொடுக்கும் என்பது அல்ல ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சனி பகவான் இருக்கக்கூடிய இடம், அமர்ந்திருக்கக்கூடிய நட்சத்திரம் ஆகியவை பொறுத்து பலன்கள் மாறுபடுகிறது.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |