சிவபெருமானுக்கு உரிய வில்வ இலையில் ஒளிந்திருக்கும் 10 ரகசியங்கள்
சிவபெருமான் பூஜையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பொருள் என்றால் அது வில்வ இலை தான். வில்வ இலை கொண்டு நாம் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அப்படியாக, இந்த வில்வ இலைகளுக்கு பின்னால் பல ரகசியங்கள் ஒளிந்து இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. இறைவழிபாட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஏதேனும் காய்ந்து விட்டால் அதை நாம் பூஜைக்கு பயன் படுத்தக்கூடாதுஎன்பதை அனைவரும் அறிவோம். ஆனால் வில்வ இலை பொறுத்தவரையில் வில்வம் காய்ந்த நிலையில் இருந்தாலும் அதை நாம் பூஜைக்கு பயன் படுத்தலாம்.
2. அதே போல், ஒரு முறை பூஜைக்கு பயன் படுத்திய வில்வத்தை நாம் மீண்டும் மறுநாள் பூஜைக்கு பயன் படுத்தலாம் என்கிறார்கள். இந்த வரிசையில் வில்வம் மட்டுமே இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது முதல் நாள் பயன்படுத்திய வில்வ இலையை மறுநாள் தண்ணீரில் சுத்தம் செய்து, மீண்டும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது நமக்கு தோஷம் எதுவும் நெருங்குவதில்லை.
3. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பலவகை உண்டு. இவற்றில் மூன்று இதழ்கள் கொண்ட வில்வத்தையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வங்களை பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது.
4. சிவபெருமானுக்கு உரிய மஹாசிவராத்திரி நாளில் நாம் வில்வ இலை கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்து, வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வழிபாடு செய்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் விலகுகிறது.
5. சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு பூஜை செய்வது சுமார் 1 லட்சம் தங்க மலர்களால் பூஜை செய்த பலனை அடைகின்றோம்.
6. அதோடு, வில்வம் வளரும் இடத்தில் பல அதீத நேர்மறை ஆற்றல் உருவாகிறது.
7. நம்முடைய வீடுகளில் வில்வம் வளர்க்கும் பொழுது நாம் 1000 பேருக்கு அன்னதானம் செய்த பலனும், புனித நதிகளில் நீராடி பெற்ற புண்ணியமும் கிடைக்கிறது.
8. வில்வ மரத்தின் காற்றை சுவாசிப்பதே ஒரு மனிதனுக்கு மிக சிறந்த சக்தியை வழங்குகிறது. மேலும், முறைப்படி விரதம் இருந்து வில்வமரத்தை பூஜை செய்து வழிபாடு செய்தால் சகல தோஷமும் விலகுகிறது.
9. வில்வம் பழத்தின் சதையை நீக்கி விட்டு, அதன் ஓடுகளை குடுவை ஆக்கி அதில் விபூதியை வைத்து பயன்படுத்துவது சிவ கடாட்சத்தை கொடுக்கிறது. வில்வ மந்திரம்
10. வில்வத்தை சிவமூலிகைகளின் சிகரம் என்றும் அழைப்பார்கள். நாம் காலையில் வில்வ இலையை பொடி செய்து பயன்படுத்தி வந்தால் நம்முடைய கண் பார்வை சீராகும். மேலும், வில்வ இலை ஒரு மனிதனுக்கு உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |