தீராத வறுமையால் கடன் பிரச்சனையா? ஒரு முறை இங்கு சென்றால் மாற்றம் நிச்சயம்
நம் அன்றாட வாழ்க்கையில் பணம் மிகவும் அவசியமானதாக உள்ளது. என்னதான் உழைத்து நிறைய பணம் சேமித்து வைத்திருந்தாலும் கிரக நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாத பொழுது நிச்சயம் அவையெல்லாம் இழக்க நேரும். அப்படியாக செல்வத்தையும் செல்வாக்கையும் அருளும் தலம் ஒன்று உள்ளது.
இங்கு தான் செல்வத்திற்கு அதிபதியான குபேரர் அவருடைய பதவியை பெற்றார். அது தான் மதுரை செல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் ஆகும். அதைப் பற்றி பார்ப்போம்.
புராண வரலாறு:
ஒருமுறை பிரம்ம தேவனின் குலத்தில் வந்த புண்ணிய சேனன் என்ற சிவபக்தர் ஒருவர் தனக்கு அழியாத செல்வத்தை பெற வேண்டும் என்று அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்த தலத்திற்கு வந்து கடும் தவம் புரிகின்றார். அவருடைய பக்தியால் மிகவும் மன மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு குபேரன் என்கின்ற அந்தஸ்தையும் அழகாபுரி என்கின்ற நகரத்தையும் பரிசாக கொடுக்கிறார்.
அது மட்டுமல்லாமல் உலகத்தில் ஒட்டுமொத்த செல்வங்களான "சங்கதி" மற்றும் "பதும நதி" ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பையும் இந்த தலத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் குபேரருக்கு வழங்குகிறார்.

ஆதலால் ஒருவருக்கு திடீர் பண கஷ்டம் தங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது, ஆனால் கேட்கின்ற இடத்தில் பணம் வருவதற்கு தாமதம் ஆகிறது. அதோடு சொந்த வீடு மனை விற்பதற்கு தடைகள் இருக்கிறது என்று வருந்துபவர்கள் கட்டாயம் இந்த ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
அதைவிட முக்கியமாக இந்த கோவிலில் எவர் ஒருவர் ஒரே ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலும் அவர்கள் 1000 பசுக்களை தானம் செய்த முழு பலனை பெற்று விடுவதாக ஐதீகம்.
ஆதலால் இழந்த பதவிகள் செல்வம் ஆகிவற்றை மீண்டும் பெற கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் கட்டாயம் மதுரையில் இருக்கக்கூடிய இந்த பஞ்சபூத தலங்களில் அப்பு (நீர்) தலமாக இருக்கக்கூடிய ஆப்புடையாரை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் இழந்ததை எல்லாம் மீண்டும் பெற்று விடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |