செவ்வாய் பெயர்ச்சி: அதிர்ஷ்டத்துடன், ஆபத்தையும் சந்திக்கும் கன்னி ராசி
செவ்வாய் பெயர்ச்சி காரணமாக கன்னி ராசி அதிர்ஷ்டத்தையும், ஆபத்தையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பெயர்ச்சி
புதிதாக பிறந்திருக்கும் 2026ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23ம் வரை செவ்வாய் கிரகமானது மகரத்தில் உச்சமடைந்துள்ளது.
மேலும் சூரியன், சந்திரன் நட்சத்திரத்திலும், தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணித்து பலனளிக்கின்றது. இதில் கன்னி ராசியினருக்கு ஆபத்துடன் கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றதாம்.
இடம், நிலம், வீடு, வண்டி இவற்றிற்கு சம்பந்தப்பட்டது செவ்வாய் கிரகம் ஆகும். முக்கியமான பதவிகளுக்கு செல்வதற்கு செவ்வாய் கிரகம் உதவியாக இருக்கின்றது. அந்த வகையில் மகர ராசியில் உச்சமடைந்துள்ள செவ்வாய் கன்னி ராசியினருக்கு சில நன்மையினை கொடுக்கின்றது.

கன்னி
ஸ்தானத்தின் அதிபதியாக இருக்கும் கன்னி ராசியினருக்கு, இந்த செவ்வாய் வலிமையாக இருப்பதால், தைரியம், துணிச்சல் அளவு கடந்து காணப்படும். அதே போன்று கோபம், ஆக்ரோஷம் அதிகமாக இருப்பதால் இதனை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மற்றவர்கள் உங்களிடம் வம்பிழுக்கும் நிலை காணப்படும் என்பதால், எந்தவொரு இடையூறில் சிக்கிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக இருக்கவும்.
நீங்கள் சரியான விடயத்தினை கூறினாலும், உங்களை கோபப்படுத்தும் குணத்தை கொண்டவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கி இருப்பது நல்மாக இருக்கும்.

நிலம் சார்ந்த விடயத்தில் ஆதாயம் மற்றும் அனுகூலம் காணப்படுவதுடன், வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெற முடியும். புதிய ஒப்பந்தம், பத்திர பதிவு, இடம் மற்றும் வீடு வாங்குவது போன்ற யோகங்கள் காணப்படுகின்றது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.
காதலிப்பவர்கள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் அவசியம் ஆகும். அவ்வாறு இல்லையெனில் அவமானம் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தைகள் விடயத்தில் வருதப்படும் நிலையும் வரலாம். அதே போன்று உடன்பிறந்தவர்கள் மூலமாக சில மனஸ்தாபம் ஏற்படும். செவ்வாய் உச்சமாக இருப்பதால் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லதாகும்.

விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படுவதுடன், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டமாக காலமாகும். செவ்வாய் வரும் 28ம் தேதி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் தந்தை விடயத்தில் சில விரயம் ஏற்படும்.
உயர் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம் வராமல் பார்த்துக் கொள்ளவும். ஜனவரி 29 முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் நல்ல லாபம் கிடைப்பதுடன், திருமண காரியங்கள் கைகூடும்.
நீர் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு கடல் தாண்டிய பயணம், திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். பிப்ரவரி 15-க்கு பின்பு அனைத்து விடயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |