வெந்நீரில் அபிஷேகம் செய்யப்படும் சிவன் கோயில்: எங்கு உள்ளது?
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் என்னும் திருத்தலத்தில் மலைக்கு மேல் அமைந்துள்ளது 1000 வருடங்கள் பழைமையான பொன்மலைநாதர் திருக்கோயில்.
இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் 15ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் விரிவுப்படுத்தப்பட்டது.
இக்கோயில் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றில் 2 அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் பொன்மலைநாதர் ஆவார்.
இக்கோயிலில் மற்ற கோயில்களில் செய்யப்படுவது போல இல்லாமல் இங்கே அபிஷேகம் வெந்நீரால் செய்யப்படுகிறது.
இருளன் என்னும் வேடனால் ஏற்பட்ட காயத்தால் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறிட்டிருக்கிறது. அதற்காக வெந்நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய இரத்தம் நின்றுள்ளது.
இதனால் இந்த சிவலிங்கத்திற்கு வெந்நீர் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த அபிஷேக நீரை பருகினால் தீராத நோய்கள் தீரும் என்று சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் முதலில் நுழைந்ததும் நம் கண்களுக்குத் தென்படுவது வீரபத்திரர் சிலை, பிறகு பிள்ளையார், அம்பாள் ஆகியோரும் உள்ளனர்.
தெற்கே விசாலாட்சி அம்மன், பிள்ளையார், முருகர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னிதிகளும் அமைந்துள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |